1500 படங்களில் பணியாற்றிய திரைப்பிரபலம் திடீர் மரணம்..! ரசிகர்கள் இரங்கல்..
Master Rakesh: டோலிவுட் சினிமாவில் சுமார் 1500 படங்களுக்கும் மேல் பணியாற்றிய நடன இயக்குனர் ராகெஷ் உடல்நலக்குறைவு காரணமாக காலாமானர்.
தெலுங்கு திரையுலகில் பிரபலமான டான்ஸ் மாஸ்டராக வலம் வந்தவர், ராகேஷ். இவர், டோலிவுட் சினிமாவின் பிரபலமான நடிகர்கள் பலரது படங்களில் பணியாற்றியுள்ளார். சில நாட்களாகவே உடல்நலக்குறைவு காரணமாக அவதிப்பட்டு வந்த இவர், தற்போது உயிரிழந்துள்ள செய்தி அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராகேஷ் மாஸ்டர்:
பல பிரபல நடிகர்களின் படங்களுளில் டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்தவர், ராகேஷ் மாஸ்டர். இவரது உண்மையான பெர்யர், எஸ்.ராமா ராவ். சுமார் 1,500 படங்களுக்கும் மேல் நடன இயக்குநராக பணிபுரிந்துள்ள இவர், நிறைய ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகவும் சிறப்பு விருந்தினராகவும் கலந்து கொண்டுள்ளார். 1961ஆம் ஆண்டு விஜயவாடாவில் பிறந்த இவருக்கு, தற்போது 53 வயது ஆகின்றது.
மேலும் படிக்க | சினிமாவிற்கு 'குட்-பை’ சொல்லும் லோகேஷ்? இயக்குநரின் ‘இந்த’ முடிவால் ரசிகர்கள் சோகம்!
உடல்நலக்குறைவு:
மாஸ்டர் முக்கு ராஜு என்பவரிடம் நடனம் குறித்த பல்வேறு விஷயங்களை கற்றுக்கொண்ட இவர் 1980ஆம் ஆண்டில் இருந்து திரையுலகில் உள்ளார். ராகேஷ் மாஸ்டர், ஒரு வாரத்திற்கு முன்புதான் விசாகப்பட்டினத்தில் இருந்து ஐதராபத்திற்கு திரும்பியுள்ளார். அப்போது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. நிலையாக இருந்த அவரது உடல்நிலை திடீரென மோசமைடந்த நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, மாஸ்டர் ராகேஷ் நீரிழிவு நோயால் அடிக்கடி அவதிப்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, அவரது உடலில் உள்ள உறுப்புகள் ஒவ்வொன்றாக செயலிழக்க தொடங்கின.
உயிரிழப்பு:
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருண்ட மாஸ்டர் ராகேஷின் உடல்நிலை மோசமடைந்ததை ஒட்டி, அவருக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சைகளும் பயன அளிக்காமல் போயின. இந்த நிலையில், நடன கலையின் ஜாம்பவான் என அழைக்கப்பட்ட ராகேஷ் கடந்த ஞாயிற்று கிழமை மாலை உயிரிழந்தார். இவரது மறைவால் ரசிகர்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
ரசிகர்கள்-திரைபிரபலங்கள் அஞ்சலி:
ராகேஷ் மாஸ்டரின் நடிப்பு திறமையை தாண்டி அவரது இயல்பான பேச்சும் அலட்டல் இல்லாமல் பழகும் தன்மையும் பலரையும் கவர்ந்தது. இவர், சமீப காலமாக ஒரு புதிய ஹேர்ஸ்டைலை கடைபிடித்து வந்தார். இதை, பல இள வட்டாரங்களும் காப்பியடிக்க தொடங்கினர். வயதானதே தவிர மனதளவில் மிகவும் இளமையுடன் இருந்தவர் ராகேஷ் மாஸ்டர் என சில ரசிகர்கள் இவர் குறித்த நினைவு பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். பிரபல தெலுங்கு நடிகர்களும் மாஸ்டருக்கு சமூக வலைதளங்களில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க | தெலுங்கு சூப்பர் ஸ்டாரின் படத்தில் இருந்து பிரபல நாயகி நீக்கம்..! காரணம் தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ