'அண்ணாத்தே' படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் ரஜினிகாந்த், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.  'பீஸ்ட்' படத்தின் சொதப்பலால் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்கமாட்டார் என்று ஆரம்பத்தில் பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில், தற்போது இந்த படத்தின் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு கிட்டத்தட்ட படத்தின் 60% பணிகள் வெற்றிகரமாக முடிவடைந்திருக்கிறது.  இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது மற்றும் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.  தற்போது தீபாவளி பண்டிகை வருவதால் சற்று இடைவெளி விட்டு குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு படத்தின் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டு நவம்பர் மாத இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | பிக்பாஸ்-6 நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறும் ஜி.பி.முத்து?


ஜெயிலர் படத்தை தொடர்ந்து, ரஜினிகாந்தை வைத்து 'தலைவர் 170' படத்தை டான் படம் மூலம் பிரபலமான சிபி சக்கரவர்த்தி இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, இதனையடுத்து 'தலைவர் 171' படத்தை தேசிங் பெரியசாமி இயக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகவும் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இந்நிலையில் நடிகரின் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகப்போகும் படத்தில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.



இது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகப்போகும் மூன்றாவது படமாகும், இந்த படத்தில் இளம் நடிகர் அதர்வா முரளி கதாநாயகனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது.  இந்த படத்திற்கு இன்னும் பெயரிடப்படவில்லை, இப்படத்திற்கான கதையை தயாரித்து வைத்திருக்கும் ஐஸ்வர்யா அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் தனது தந்தையை நடிக்குமாறு வலியுறுத்தியாகவும், அதற்கு அவர் ஒப்புக்கொண்டதாகவும் கூறப்படுகிறது, விரைவில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க | சர்தார் படம் எப்படி இருக்கு? திரை விமர்சனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ