நடிகர்கள் பட்டாள அறிவிப்புடன் ‘தளபதி68’ பூஜை வீடியோ வெளியானது
Thalapathy 68 Poojai Video: நடிகர்கள் பட்டாள அறிவிப்புடன் கூடிய ‘தளபதி68’ படத்தின் பூஜை வீடியோ சற்று முன் பிரம்மாண்டமாக வெளியானது.
தளபதி 68 படத்தின் பூஜை வீடியோ: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 68' படத்தின் பூஜை வீடியோவை சற்று முன் வெளியிட்டது படக்குழு. இந்த வீடியோ தற்போது டிரெண்டாகி வருகின்றது.
தளபதி 68 திரைப்படத்தின் அப்டேட்:
இளம் நடிகர்களை வைத்து ஜாலியான படங்களை இயக்கி வருபவர், வெங்கட் பிரபு. திரில்லர் கதையாக இருந்தாலும் கிரைம் கதையாக இருந்தாலும் அதில் காமெடி அம்சங்களை பொறுத்தி மக்களை சிரிக்க வைப்பதில் கவனம் செலுத்துபவர் இவர். வெங்கட் பிரபு, அடுத்து நடிகர் விஜய்யை வைத்து இயக்க இருக்கும் படம்தான், தளபதி 68. இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை.
தளபதி 68 திரைப்படத்தின் பூஜை வீடியோ:
இந்நிலையில் தற்போது சற்று முன் நடிகர்கள் பட்டாள அறிவிப்புடன் கூடிய தளபதி68 படத்தின் பூஜை வீடியோ பிரம்மாண்டமாக வெளியானது. கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில் 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே வெங்கட் பிரபு - விஜய் காம்பினேஷனில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. மேலும், இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து ரசிகர்கள் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
தளபதி 68 திரைப்படத்தின் நடிகர் நடிகைகளின் விவரம்:
இந்த படத்தின் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம் ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மீனாட்சி சவுத்ரி இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
வைரலான ட்வீட்:
இதைக்கிடையில் இந்த பூஜை வீடியோ வெளியாகுவாதற்கு முன்னதாக தயாரிப்பு தரப்பான ஏஜிஎஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இன்றைய பதிவில் இன்று விஜயதசமியில் அந்த ஸ்கிரிப்ட் கொஞ்சம் அனுப்பினால் அதை பூஜை போட்றலாம் என்று கலாய்த்துள்ளனர். இதுவரை ஸ்கிரிப்டே கொடுக்கவில்லை என்பதை குறிப்பிட்டு அவர்கள் கொடுத்துள்ள இந்த பதிவிற்கு வெட்கப்படுவதாக நடிகர் செந்திலின் கிளிப்பிங்கை பதிலாக கொடுத்துள்ளார் வெங்கட் பிரபு. இதையடுத்து அர்ச்சனா கல்பாத்தியும் இதுதான் உங்க VCU-வா என்று கலாய்த்துள்ளார்.
இதையடுத்து மீண்டும் பதிலளித்துள்ள வெங்கட் பிரபு, இது ஒரு நல்ல கேள்வி, சரியான கேள்வி என்று கூறியுள்ளார். மேலும் என்ன பிரச்சினைன்னா, கரெக்ஷன் சொல்ல மாட்டோம்னு சத்தியம் பண்ணுங்க என்று தெரிவித்துள்ளார். அப்படி சொன்னால் ஆபீஸ்ல ஸ்கிரிப்ட் எங்க இருக்குன்னு சொல்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்கிரிப்ட் எப்பவோ ரெடி என்றும் முதல் ஷெட்யூலே 15 நாட்கள் நடந்து முடிந்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ள வெங்கட் பிரபு, என்ன அட்மீன் என்று நகைச்சுவையாக கேள்வி எழுப்பியுள்ளார்.
அடுத்தடுத்த படப்பிடிப்புகள்:
தற்போது படத்தின் ஆக்ஷன் காட்சிகள் சென்னையிலேயே எடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து படக்குழுவினர் வெளிநாட்டிற்கு அடுததக்கட்ட சூட்டிங்கிற்காக செல்ல திட்டமிட்டுள்ளனர். படத்தின் அதிகப்பட்ச காட்சிகள் வெளிநாட்டில் படமாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ