‘தளபதி 68’ படப்பிடிப்பு ‘இந்த’ தேதியில் தொடக்கம்..? வெளியானது ருசிகர தகவல்..!

Thalapathy 68 Update: விஜய் நடிக்கவுள்ள தளபதி 68 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

Written by - Yuvashree | Last Updated : Sep 10, 2023, 02:06 PM IST
  • விஜய் அடுத்து நடிக்கவுள்ள படம் தளபதி 68.
  • இதற்கான ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
  • படப்பிடிப்பு தொடங்குவது எப்போது தெரியுமா..?
‘தளபதி 68’ படப்பிடிப்பு ‘இந்த’ தேதியில் தொடக்கம்..? வெளியானது ருசிகர தகவல்..!  title=

நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள்ள படம், தளபதி 68. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படம் குறித்த சுவாரஸ்யமான அப்டேட்டுகள் சினிமா வட்டாரங்களில் இருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. 

தளபதி 68:

இளம் நடிகர்களை வைத்து ஜாலியான படங்களை இயக்கி வருபவர், வெங்கட் பிரபு. திரில்லர் கதையாக இருந்தாலும் கிரைம் கதையாக இருந்தாலும் அதில் காமெடி அம்சங்களை பொறுத்தி மக்களை சிரிக்க வைப்பதில் கவனம் செலுத்துபவர் இவர். வெங்கட் பிரபு, அடுத்து நடிகர் விஜய்யை வைத்து இயக்க இருக்கும் படம்தான், தளபதி 68. இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இப்டத்திற்கான நடிகர்கள் தேர்வு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதில் நடிக்க உள்ளவர்கள் குறித்தும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்தும் சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பரபரப்பான ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள்..

விஜய்யின் 68வது படத்தின் ப்ரீ-ப்ரொடக்ஷன் பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதற்கான வேலையாக சில வாரங்களுக்கு முன்னர் நடிகர் விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்காவில் உள்ள திரைப்பட கல்லூரிக்கு சென்றனர். அங்கு விஜய்க்கு லுக் டெஸ்ட் நடைப்பெற்றது. 

மேலும் படிக்க | தோல்வி படங்களே கொடுக்காத ‘அந்த’ 4 தமிழ் இயக்குநர்கள்..! யார் யார் தெரியுமா..?

படப்பிடிப்பு தொடங்குவது எப்போது..? 

தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்பது குறித்த அப்டேட்டிற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்தனர். விஜய்யின் ‘லியோ’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த சமயத்தில் தளபதி 68 படத்தின் அப்டேட்டுகள் வெளிவந்தால் ‘லியோ’ படத்திற்கு பாதிப்பு வரும் என்று கருதப்படுகிறது. இதனால், விஜய்யின் 68வது படம் குறித்த தகவல்களை அப்படக்குழு கொஞ்சம் ரகசியமாகவே வைத்துள்ளது. இந்த நிலையில், சினிமா வட்டாரங்களில் இருப்போர் புதிதாக சில தகலவ்களை வெளியிட்டுள்ளனர். அதில், வரும் காந்தி ஜெயந்தி அன்று தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்பட்டுள்ளது. காந்தி ஜெயந்தி அக்டோபர் 19ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது. 

இரு வேடங்களில் விஜய்..

தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதில், வயதான விஜய்க்கு ஜோடியாக சிம்ரன் நடிக்க உள்ளதாகவும், இளைய வயது விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. விஜய்-சிம்ரன் இருவருமே தங்களது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலக்கட்டத்தில் இணைந்து நடித்துள்ளனர். இவர்கள் ஜோடியான நடித்த துள்ளாத மனமும் துள்ளும், பிரியமானவளே, உதயா போன்ற படங்கள் சூப்பர் ஹிட் அடித்துள்ளன. யூத் படத்தில் வரும் ‘ஆள்தோட்ட பூபதி’ பாடலுக்கு சிம்ரன் நடனமாடியிருப்பார். இவரும் விஜய்யும் சினிமாவை தாண்டி நிஜ வாழ்க்கையிலும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 

பிரியங்கா மோகன்..

கோலிவுட்டின் சமீபத்திய டிரெண்டிங் கதாநாயகியாக இருப்பவர், பிரியங்கா மோகன். இவர், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ படத்தில் நடத்து அறிமுகமானார். அடுத்து, இதையடுத்து அவருடனேயே ‘டான்’ படத்திலும் ஜோடியாக நடித்தார். தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் கதாநாயகி இவர்தான். தற்போது விஜய்க்கும் ஜோடியாக இவர் நடிக்கவுள்ள தகவல் ரசிகர்களி்டையே தீயாக பரவி வருகிறது. 

பிற நடிகர்கள்..

தளபதி 68 படத்தில் யார் யார் நடிக்க இருக்கிறார்கள் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது கசிந்து வருகின்றன. விஜய்க்கு தம்பியாக பகவதி படத்தில் நடித்த ஜெய் தற்போது இத்தனை வருடங்கள் கழித்து தளபதி 68 படத்திலும் அவருக்க சகோதரராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு ஜோடியாக அபர்ணா தாஸ் நடிக்க உள்ளாராம். இவர்களுடன் நடன இயக்குநரும் திரைப்பட இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா இணைகிறார் என்ற தகவல்களும் உள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களுக்காக ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். 

மேலும் படிக்க | ஜெயம் ரவியின் பிறந்தநாளை முன்னிட்டு ‘சைரன்’ படத்தின் ஃப்ரீபேஸ் லுக் வெளியீடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News