‘தளபதி 68’ படத்தில் விஜய்க்கு 2 கதாநாயகிகள்…! யார் யார் தெரியுமா..?
Thalapathy 68: நடிகர் விஜய் அடுத்து நடிக்கவுள் ‘தளபதி 68’ படத்தின் புதிய அப்டேட்டுகள் வெளியாகியுள்ளன.
‘லியோ’ படத்தை அடுத்து நடிகர் விஜய் நடிக்கவுள்ள படம், தளபதி 68. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படம் குறித்த சுவாரஸ்யமான அப்டேட்டுகள் சினிமா வட்டாரங்களில் இருந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.
தளபதி 68:
தமிழ் சினிமாவின் ‘ஜாலி’ இயக்குநர் என்று புகழப்படுபவர் வெங்கட் பிரபு. திரில்லர் கதையாக இருந்தாலும் கிரைம் கதையாக இருந்தாலும் அதில் காமெடி அம்சங்களை பொறுத்தி மக்களை சிரிக்க வைப்பதில் கவனம் செலுத்துவார். இவர், அடுத்து நடிகர் விஜய்யை வைத்து இயக்க இருக்கும் படம்தான், தளபதி 68. இந்த படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்திற்கான நடிகர்கள் தேர்வு பணிகள் நடைப்பெற்று வருகின்றன. இதில் நடிக்க உள்ளவர்கள் குறித்தும் படத்தின் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது குறித்தும் சில தகவல்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் படிக்க | யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்த ரஜினி... வீடியோவுக்கு ரசிகர்களின் ரியாக்சன் என்ன?
2 விஜய்-2 நாயகிகள்..
தளபதி 68 படத்தில் நடிகர் விஜய் இரண்டு கதாப்பாத்திரங்களில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இதில், வயதான விஜய்க்கு ஜோடியாக ஜோதிகா நடிக்க இருப்பதாகவும், இளைய வயது விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கசிந்துள்ளது. விஜய் மற்றும் ஜோதிகா ஆகிய இருவருமே தங்களது சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலக்கட்டத்தில் இணைந்து நடித்துள்ளனர். எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளியான ‘குஷி’ படத்தில் இணைந்து நடித்த இவர்களின் கெமிஸ்ட்ரி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்து போனது. இதையடுத்து இதே ஜோடி 2003 ஆம் ஆண்டு மீண்டும் கைக்கோர்த்து வெற்றி பெற்றது. தற்போது கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இவருவரும் மீண்டும் கைக்கோர்க்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் சமீபத்திய டிரெண்டிங்க கதாநாயகியாக இருப்பவர், பிரியங்கா மோகன். இவர், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘டாக்டர்’ படத்தில் நடத்து அறிமுகமானார். அடுத்து, இதையடுத்து அவருடனேயே ‘டான்’ படத்திலும் ஜோடியாக நடித்தார். தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் கதாநாயகி இவர்தான். தற்போது விஜய்க்கும் ஜோடியாக இவர் நடிக்கவுள்ள தகவல் ரசிகர்களி்டையே தீயாக பரவி வருகிறது.
கதை இதுதான்…
தளபதி 68 படத்தின் கதை குறித்த தகவலும் சினிமா வட்டாரங்களில் இருந்து கசிந்துள்ளது. இப்படம் ஒரு வெறித்தனமான அரசியல் திரில்லர் என்றும், விஜய் இதுவரை செய்திராத பல விஷயங்களை இந்த படத்தில் செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் விஜய் விரைவிலேயே சினிமாவை விட்டு விலகி அரசியலில் கால்பதிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் கடைசியாக நடிக்கும் படம் ஒரு அரசியல் படமாக இருக்கும் எனவும் சொல்லப்படுகிறது. இதனால், இவரது 68வது படம்தான் ஒருவேளை கடைசி படமாக இருக்குமோ என்ற சந்தேகம் ரசிகர்கள் மனங்களில் எழுந்துள்ளது.
படப்பிடிப்பு எப்போது..?
தளபதி 68 படத்திற்கான ‘லுக் டெஸ்ட்’ பணிகள் விரைவில் லண்டனில் தொடங்க உள்ளதாம். படத்திற்கான நடிகர்களின் தேர்வு சென்னையில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘லியோ’ படத்தின் ரிலீஸிற்கு பிறகு அக்டோபர் மாதத்தின் இறுதி தேதிகள் அல்லது நவம்பர் முதல் வாரத்தில் தளபதி 68 படத்திற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதன்முறையாக இணையும் கூட்டணி..
இயக்குநர் வெங்கட் பிரபு, சென்னை-28 படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர். ஆரம்பம் முதல், தற்போது வரை தனது படங்களில் ரசிகர்கள் அனுபவித்து சிரிக்கும் வகையிலான திரைக்கதையையே பின்பற்றி வருகிறார். விஜய், சமீப காலங்களாக ஆக்ஷன்-திரில்லர் கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில், இவர்கள் இருவரின் கூட்டணி எப்படி இருக்கும்? என்ற ஆவல் ரசிகர்களின் மனங்களில் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | நீண்ட நாள் காதலியை திருமணம் செய்து கொண்டார் நடிகர் கவின்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ