ரசிகர்களால் அன்புடன் ‘தளபதி’ என்று அழைக்கப்படும் நடிகர் விஜய். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் இவர், விரைவில் அரசியலில் களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இவரது கடைசிபடம் குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அரசியலில் களமிறங்கும் விஜய்..


நடிகர் விஜய்க்கு அரசியலில் ஈடுபாடு உள்ளது என்பது அனைவருக்கும் தெளிவாகவே தெரிந்து விட்டது. இதை உறுதிப்படுத்தும் வகையில், தனது படங்களில் அரசாங்கத்தை தாக்கும் வகையில் பஞ்ச் வசனங்கள் பேசுவது, சமூகத்திற்கு கருத்துகள் கூறுவது போன்ற வேலைகளை செய்து வருகிறார். படத்தில் மட்டுமன்றி, பட விழாக்களிலும் இவர் பேசும் கருத்துகளும், குட்டி ஸ்டோரீஸ்களும் ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.


விஜய் ஒரு பக்கம் படங்களிலும் பட விழாக்களிலும் தனது அரசியல் ஆர்வத்தை காண்பித்து கொண்டிருக்க, இவரது ரசிகர்கள் ஆரம்பித்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள், களத்தில் இறங்கி மக்கள் பணிகளை செய்து வருகின்றனர். சமீபத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென் தமிழக மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் விஜய். இதையடுத்து, இவர் வரும் தேர்தலை குறிவைத்து அரசியலில் முழு நேரமாக களமிறங்க உள்ளதாக கூறப்படுகிறது. 


கடைசி படம்..


நடிகர் விஜய், தற்போது தனது 68வது படமான GOAT-Greatest Of All Time படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தினை வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இதில் நடிகைகள் சினேகா, மீனாட்சி செளத்ரி, லைலா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பிரசாந்த், பிரபு தேவா, அஜ்மல் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கின்றனர். வெளிநாட்டில் தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது, சென்னையில் நடைப்பெற்று வருகிறது. 


GOAT படத்தை அடுத்து, நடிகர் விஜய் தனது 69வது படத்தின் வேலைகளில் இறங்க உள்ளதாக சில நாட்களுக்கு முன்னர் தகவல் வெளியானது. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க இருப்பதாகவும், சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இதையடுத்து விஜய் தனது கடைசி படத்தை இயக்க ஒரு பெரிய இயக்குநரை தேர்வு செய்திருப்பதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | Vijay: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்? காரணம் இதுதானா! அதிர்ச்சி தகவல்..



தளபதி 70:


விஜய்யின் 70வது படத்தை, தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர், ஏற்கனவே விஜய்யை ஹீரோவாக வைத்து, நண்பன் படத்தை இயக்கியிருக்கிறார். இதையடுத்து கிட்டத்தட்ட 12 வருடங்கள் கழித்து இவர்கள் மீண்டும் கைக்கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம், 2025ஆம் ஆண்டில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம், அரசியல் த்ரில்லராக இருக்கும் என்றும், இதுவே விஜய்யின் கடைசி படமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மட்டுமன்றி, தளபதி 70 படத்தை ஹெச்.வினோத்தும் டைரக்டு செய்ய இருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசிக்கொள்கின்றனர். இந்த படத்தை டிவிவி எண்டெர்டெயின்மண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. 


விஜய்யின் அரசியல் கட்சியின் பெயர்..


நடிகர் விஜய், சில நாட்களுக்கு முன்னர் தனது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது, தான் அரசியலுக்கு வரவுள்ளதை அவர் அறிவித்ததாகவும், விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இவரது அரசியல் கட்சியின் பெயர், ‘தமிழக முன்னேற்ற கழகம்’ என்றும் சொல்லப்படுகிறது. வரும் பிப்ரவரி மாதம், இந்த கட்சியை அரசியல் கட்சியாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எதுவாக இருந்தாலும், இன்னும் சில நாட்களுக்குள் விஜய்யே இது குறித்து தெரிவிப்பார் என்று அவரது மக்கள் இயக்க நிர்வாகிகளின் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது. 


மேலும் படிக்க | விஜய் போலவே அரசியலில் ஈடுபாடுள்ள தமிழ் நடிகர்கள்! யார் யார் தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ