தமிழ் திரையுலகில் என்றென்றும் இளமையாக காட்சியளிக்கும் தளபதி விஜய்க்கு ஆண், பெண் என ஏரளமான ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது.  இவரை ரசிகர்கள் எந்தளவு கொண்டாடுகிறார்களோ அதே அளவு அவரை சேர்ந்தவர்களையும் கொண்டாடி வருகின்றனர், தளபதி விஜய் பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக இருந்து வருகிறார்.  இவரது படங்கள் எப்படி இருந்தாலும் சரி, அதனை கொண்டாடுவதற்கென்றே தனியாக ஒரு கூட்டம் உள்ளது.  இவர் சங்கீதா என்பவரை காதலித்து இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 1999ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | மீண்டும் முதலிருந்து தொடங்கப்படுகிறதா இந்தியன் 2? படப்பிடிப்பு எப்போது?


இவர் லண்டனை சேர்ந்த தொழிலதிபர் சொர்ணலிங்கம் என்பவரது மூத்த மகள் ஆவார்.  விஜய் மற்றும் சங்கீதா இவர்களின் அன்பின் அடையாளமாக தற்போது இவர்களுக்கு ஜேசன் விஜய் என்கிற மகனும், திவ்யா சாஷா என்கிற மகளும் உள்ளனர்.  தற்போது விஜய் அவர் குடும்பத்தினருடன் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் ஒரு பழைய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது, அதில் விஜய் மற்றும் சங்கீதா ஆகியோருடன் உடன் இருக்கும் பெண் யார் என்கிற கேள்வி பலருக்குள்ளும் எழுந்து வந்தது.  அந்த புகைப்படத்தில் இருக்கும் பெண் வேறு யாருமில்லை, விஜய்யின் மனைவி சங்கீதாவின் சொந்த தங்கை தானாம்.  அக்கா, தங்கை இருவரும் ஒரே மாதிரியான முக சாயலை கொண்டு இருக்கின்றனர்.



சொர்ணலிங்கத்தின் இரண்டாவது மகளான இவர் லண்டனில் பல்வேறு தொழில்களை செய்து வருகிறார். தற்போது இந்த படம் தான் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.  தற்போது தளபதி விஜய் வம்சி பைடிப்பள்ளி இயக்கும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு பணிகளில் படுபிஸியாக நடித்து கொண்டு இருக்கிறார்.  இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா முதன்முறையாக நடித்துள்ளார்.  இந்த படத்தின் பணிகளை முடித்த பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 'தளபதி 67' படத்தில் நடிக்கவிருக்கிறார்.


மேலும் படிக்க | விஜய்யுடன் தீராத மனக்கசப்பு... ஆத்திரத்தின் உச்சியில் எஸ்.ஏ.சி?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR