நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் திரைப்படம் வருகிற 3ஆம் தேதி வெளியாகவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்துக்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள நிலையில் படத்துக்கான அட்வான்ஸ் டிக்கெட் புக்கிங்குகளும் தொடங்கி, விற்பனை ஜோராக நடந்துவருகிறது. 1986ஆம் ஆண்டு கமல் நடிப்பில் விக்ரம் எனும் படம் வெளியானது. 


அதில் விக்ரம் எனும் RAW ஏஜெண்டாகக் கமல் நடித்திருந்தார். அந்த விக்ரம் மீண்டும் புலனாய்வுக் களத்தில் இறங்குவதுபோலத்தான் தற்போதைய விக்ரம் எடுக்கப்பட்டுள்ளதாம்.


பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தப் படம் சில வெளிநாடுகளில் ஜூன் 2ஆம் தேதியே வெளியாகவுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் திரைவிமர்சனம் ஒன்று இணையத்தில் வைரல் ஆகிவருகிறது. ஓவர்சீஸ் சென்சார் விமர்சனம் எனும் பெயரில் நபர் ஒருவர் இதனை வெளியிட்டுள்ளார்.



மேலும் படிக்க | ‘குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க..’ - அஜித் சொல்லும் ‘கழுதைக் கதை’ யாருக்கு?


அதில் விக்ரம் தமிழில் வெளிவந்த மிகச்சிறந்த ஆக்சன் த்ரில்லர் படங்களில் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தொடக்கம் முதல் இறுதி வரை ஆக்‌ஷன் காட்சிகள் கலக்கலாக உள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கமல், விஜய் சேதுபதி மற்றும் பகத் பாசில் சிறப்பாக நடித்துள்ளனராம். குறிப்பாக, க்ளைமாக்ஸ்தான் இப்படத்தின் USP எனவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகப் பரவி வருகிறது.


மேலும் படிக்க | மீண்டும் பாச மழை பொழிந்த எஸ்.கே- அருண் விஜய்.. விக்ரமன் படமாக மாறிய ஹரி படம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR