மீண்டும் பாச மழை பொழிந்த எஸ்.கே- அருண் விஜய்.. விக்ரமன் படமாக மாறிய ஹரி படம்!

ஹரி இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்துள்ள யானை படத்துக்கு நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 31, 2022, 03:31 PM IST
  • அருண் விஜய்யின் யானை ட்ரெய்லர் வெளியீடு
  • அருண் விஜய்க்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து
  • சிவகார்த்திகேயனுக்கு அருண் விஜய் நன்றி
மீண்டும் பாச மழை பொழிந்த எஸ்.கே- அருண் விஜய்.. விக்ரமன் படமாக மாறிய ஹரி படம்! title=

நடிகர்கள் சிவகார்த்திகேயன் மற்றும் அருண் விஜய் இடையே நிலவிவந்த பனிப்போர் பலரும் அறிந்ததே. இந்த விவகாரத்தை முதன்முதலாகத் தொடங்கிவைத்தவர் அருண் விஜய்தான்.

சீமராஜா படம் வெளியான சமயத்தில் அப்படத்துக்கு அதிகாலை சிறப்புக் காட்சி அனுமதி வழங்கப்பட்டது. அப்போது நடிகர் அருண் விஜய்யின் ட்விட்டர் பக்கத்தில், யாரெல்லாம் மாஸ் பண்றதுனு விவஸ்தை இல்லாமப் போச்சு என ஒரு பதிவு வெளியானது. இதைக்கண்ட பலர் இது சிவகார்த்திகேயனைக் கிண்டலடித்து போடப்பட்ட பதிவுதான் எனக் கூறிவந்தனர்.

இதையடுத்து அது அருண் விஜய் தனது டிவிட்டர் கணக்கை யாரோ ஹேக் செய்துவிட்டனர் எனத் தெரிவித்திருந்தார்.இதையடுத்து மிஸ்டர் லோக்கல் எனும் படத்தில் வந்த காமெடிக் காட்சி ஒன்று அருண் விஜய்யின் ட்விட்டர் போஸ்ட்டைக் கிண்டலடிக்கும் விதமாக இருப்பதாக ரசிகர்கள் மத்தியில் கூறப்பட்டது. 

மேலும் படிக்க | ‘குறை சொல்லிக்கிட்டேதான் இருப்பாங்க..’ - அஜித் சொல்லும் ‘கழுதைக் கதை’ யாருக்கு?

இதனிடையே விழாவொன்றில் கலந்துகொள்ளவந்த சிவகார்த்திகேயனை வரவேற்க, அந்தக் கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த அருண் விஜய் ஓர் ஓரமாகத் தள்ளப்பட்டார். இப்படியாகச் சென்றுகொண்டிருந்த இந்த மோதல் விவகாரம் அண்மையில் நிறைவுக்கு வந்தது. சில வாரங்களுக்கு முன்பு அருண் விஜய்யின் மகனுக்கு பிறந்த நாள் வந்தது. அப்போது சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.

இந்தப் பதிவு பலரையும் ஆச்சர்யப்படுத்தியது. பதிலுக்கு அருண் விஜய்யும் அதற்கு நன்றி கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் இருவரும் பாச மொழிந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள யானை படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. இதனை வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன், அருண் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் இதற்குப் பதில் கூறியுள்ள நடிகர் அருண் விஜய், நன்றி தெரிவித்தது மட்டுமல்லாமல், சிவகார்த்திகேயனின் வெற்றிக்கு தனது உண்மையான வாழ்த்துகள் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | வெந்து தணிந்தது காடு... 'மாநாடு' படத்தை 100 கோடி வசூல் லிஸ்ட்டுல போடு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News