தளபதி 66ல் மிஸ் ஆகும் மாஸ்?... கவலையில் ரசிகர்கள்
விஜய்யின் அடுத்த படத்தில் சண்டை காட்சிகள் எதுவும் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படம் சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. படத்தை பார்த்த ரசிகர்கள் விஜய்யை வீணாக்கிவிட்டார் நெல்சன் என தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
இந்தச் சூழலில் விஜய் வம்சி இயக்கத்தில் அடுத்த படத்தில் நடித்துவருகிறார். தமன் இசையமைக்கும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துவருகிறார்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு சென்னையில் தொடங்கியது. இரண்டாம்கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜய் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?
இதற்கிடையே இப்படம் குடும்ப பின்னணியுடன் எமோஷனலாக உருவாக இருப்பதாகவும், விஜய்க்கு சகோதரராக இயற்கை உள்ளிட்ட படங்களில் நடித்த ஷ்யாம் நடிக்கவிருக்கிறார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், இப்படத்தில் சண்டை காட்சிகள் எதுவும் இருக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இருப்பினும் விஜய்க்கு நடனம் எப்படி பலமோ அதுபோல்தான் சண்டை காட்சிகளும். அந்த மாஸ் சீன்கள் எதுவும் இல்லாமல் ரசிகர்களிடம் இப்படம் எடுபடுமா என்று பலர் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றனர்.
மேலும் படிக்க |160 மொழிகளில் வெளியாகும் அவதார் 2... ட்ரெய்லர் எப்போது?
முன்னதாக, நிகழ்ச்சி ஒன்றில் கலந்த்கொண்ட வம்சி, “தளபதி 66 படத்தைப் பற்றி பேசவே பயமாக இருக்கின்றது” என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR