பொதுவாகவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.  கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட 'பாக்கியலட்சுமி'  எனும் சீரியல் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது.  அதில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும், சாதாரண குடும்பத்திலுள்ள நபர்களுடன் ஒத்துப்போகும் வகையில் அமைந்துள்ளது.  குடும்ப தலைவியின் தியாகத்தை குறிக்கும் வகையில் எடுக்கப்பட்ட இந்த தொடரானது, தற்போது சமூக அவலங்களை வெளியுலகிற்கு எடுத்து காட்டி வருகிறது.  அந்த வகையில் தொடர் அவலமாக நடந்துவரும் ஆசிரியர்கள் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லை தரும் கான்செப்டை இந்த தொடர் தற்போது கையில் எடுத்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | ரசிகர்கள் ஏமாற்றம்; மாநாடு திரைப்படத்தின் வெற்றி விழா தள்ளி வைப்பு!


இதில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியாக டிக்டாக் புகழ் பிரணிகா நடித்துள்ளார்.  கதைப்படி பத்தாம் வகுப்பு படிக்கும் இப்பெண்ணுக்கு அவரது ஆசிரியர் ஒருவர் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வருகிறார்.  இதனை வீட்டில் சொல்ல பயந்து கொண்டு, தனது தோழிகளிடம் மட்டுமே இந்த விஷயத்தை கூறும் அந்த பெண் ஒரு கட்டத்தில் தற்கொலை செய்துக்கொள்கிறார்.  இதுகுறித்த ப்ரோமோ வெளியானதில் இருந்தே சில தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பியது.



இந்நிலையில் முஹம்மது கோஷ் என்னும் நபர் இந்த காட்சிக்கு எதிராக சீரியல் மீது காவல்துறையில் புகாரளித்துள்ளார்.  அந்த புகாரில் அவர் கூறுகையில், "பொதுவாக தற்கொலை என்பது மிகவும் தவறான ஒரு செயல்.  அதிலும் குறிப்பாக பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அவலம் மிகவும் தவறானது.  தற்கொலை என்பது எப்போதும், எந்த பிரச்சனைக்கும் தீர்வாகாது என்பதை பெற்றோர்கள் பிள்ளைகளிடம் சொல்லிக்கொடுத்து இருக்கிறோம்.  இதுபோன்ற பாலியல் தொல்லைகள் நடக்கும் பட்சத்தில் மாணவிகள் வீட்டில் சொல்ல பயமிருந்தால், காவல்துறையில் புகார் அளிக்க நாங்கள் சொல்லிக்கொடுத்து இருக்கிறோம்.  இந்நிலையில் இதுபோன்று மாணவி தற்கொலை செய்வதாக இந்த தொடரில் காட்சிப்படுத்தி இருப்பது முட்டாள்தனமாக இருக்கிறது.  அதனால் இதுபோன்ற காட்சிகளை அவர்கள் நீக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.


ALSO READ | Master vs valimai: இரண்டு படத்திற்கும் உள்ள ஒற்றுமைகள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR