Thiruchitrambalam OTT Release: தனுஷ் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் திரைப்படம், ஒரு வருடம் கழித்து ஓடிடியில் வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படங்களுள் ஒன்று, திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வழங்கியிருந்தது. கடந்த ஆண்டு ஆகஸ்டு 18ஆம் தேதி வெளியான இப்படம் ஒரு ஆண்டு கழித்து ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 


திருச்சிற்றம்பலம்:


மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியிருந்த படம், திருச்சிற்றம்பலம். படத்தில் வரும் ஹீரோவின் பெயரையே படத்தின் டைடிலாகவே வைத்து விட்டனர். ஒரு சாதாரண உணவு டெலிவரி செய்யும் மனிதனின் வாழ்வில் நடக்கும் காதல்-மோதல்-பாசம் மிகுந்த கதைதான் திருச்சிற்றம்பலம். இதில் நாயகிகள் ராஷி கண்ணா, பிரியா பவானி ஷங்கர், நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் தனுஷிற்கு தந்தையாக பிரகாஷ் ராஜ் நடித்திருப்பார். தாத்தாவாக பாரதிராஜா நடித்திருப்பார். நீண்ட நாட்களுக்கு பிறகு தனுஷிற்கு ஹிட் கொடுத்த படமாக பார்க்கப்பட்டது திருச்சிற்றம்பலம். 


ஓடிடியில் வெளியீடு:


திருச்சிற்றம்பலம் படம் வெளியாகி ஒரு ஆண்டிற்கு மேலாகி விட்ட நிலையில், அப்படம் சன் நெக்ஸ்ட் தளத்தை தவிர வேறு எந்த ஓடிடி தளங்களிலும் வெளியாகாமல் இருந்தது. இந்த நிலையில், இம்மாதத்தின் 6ஆம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | வசூலில் முன்னேறும் திருச்சிற்றம்பலம் - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்


படத்தின் வசூல்:


நடிகர் தனுஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு நடித்திருந்த குடும்ப திரைப்படம், திருச்சிற்றம்பலம். இப்படம், உலகம் முழுவதும் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. படத்தில் நடித்திருந்தவர்கள், ஒளிப்பதிவு, இசை என அனைத்திற்கும் திருச்சிற்றம்பலம் படம் பாராட்டை பெற்றது. படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார். பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. இந்த படத்தை அடுத்து தனுஷ் வாத்தி படத்தில் நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகியிருந்த இப்படமும் 100 கோடியை தாண்டி வசூல் செய்தது. 


தனுஷின் அடுத்தடுத்த படங்கள்:


தனுஷ், தற்போது பல படங்களில் கமிட் ஆகி உள்ளார். தனுஷ், நடிப்பில் தற்போது கேப்டன் மில்லர் படம் உருவாகி வருகிறது. சாணிகாயிதம் படத்தை இயக்கிய அருண் மாத்தேஸ்வரன் இந்த படத்தையும் இயக்கியுள்ளார். இப்படம் உண்மை சம்பவங்களை வைத்து தயாராகியுள்ளது. இதில் சிவராஜ் குமார் நடித்துள்ளார். அடுத்து, தனுஷ் அவரது 50வது படத்தில் நடிக்க இருக்கிறார். இதை அவரே இயக்கவும் செய்கிறார். ‘கர்ணன்’ படம் மூலம் மாரி செல்வராஜ் உடன் இணைந்த தனுஷ், இன்னாெரு படத்திலும் அவருடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், கேப்டன் மில்லர் படத்தை டைரக்டு செய்துள்ள அருண் மாத்தேஸ்வரன் உடனே இன்னொரு படத்திலும் அவர் கைக்கோர்க்க உள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் படிக்க | திருச்சிற்றம்பலம் திரைப்படம் - தனுஷ், பாரதி ராஜா ஸ்டில்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ