வசூலில் முன்னேறும் திருச்சிற்றம்பலம் - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம்

தனுஷ் நடிப்பில் வெளியா'திருச்சிற்றம்பலம்' திரைப்படம் இதுவரை ரூ.59 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Written by - க. விக்ரம் | Last Updated : Aug 27, 2022, 04:28 PM IST
  • திருச்சிற்றம்பலம் படம் சமீபத்தில் வெளியானது
  • படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு
  • படம் இதுவரை 60 கோடி ரூபாய் வசூல் என தகவல்
வசூலில் முன்னேறும் திருச்சிற்றம்பலம் - தனுஷ் ரசிகர்கள் உற்சாகம் title=

இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக இருந்தவர் மித்ரன் ஆர். ஜவஹர். இவர்,'யாரடி நீ மோகினி', ‘குட்டி’ 'உத்தம புத்திரன்' உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்தவர். இவரும், தனுஷும் நீண்ட வருடங்கள் கழித்து  இணைந்த திரைப்படம் 'திருச்சிற்றம்பலம்'. நித்யாமேனன், ராஷி கண்ணா, ப்ரியா பவானி சங்கர், பாரதிராஜா, பிரகாஷ் ராஜ் நடிப்பில் உருவான இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. அனிருத் இசையைமத்த இப்படம் கடந்த ஆகஸ்ட் 18-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

உலகளவில் 600 திரையரங்குகளில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தமிழில் இதுபோன்று ஃபீல் குட் படம் வெளியாகி பல வருடங்கள் ஆகிவிட்டதாகவும், நித்யா மேனன் நடித்திருந்த ஷோபனா கதாபாத்திரம் கண்களில் ஒத்திக்கொள்ளும் அளவு அழகாக இருப்பதாகவும் பாசிட்டிவ் விமர்சனங்களைப் பெற்றது. இதனால் படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ.9.52 கோடியை வசூலித்தது. இரண்டாவது நாளும் நல்ல விமர்சனங்கள் பெற்றதன் காரணமாக மக்கள் கூட்டம் திரையரங்குகளில் அலைமோதியது. இதனால் இரண்டாவது நாள் ரூ.8.79 கோடியை படம் வசூலித்தது.

Thiruchitrambalam

அந்த வகையில் முதல் வாரம் மட்டும் ரூ.51.42 கோடி ரூபாயை படம் வசூலித்தது. இரண்டாவது வாரத்தின் முதல் நாள் ரூ.3.47 கோடியும், இரண்டாவது நாள் ரூ.4.61 கோடியும் வசூலித்தது. இந்தச் சூழலில் இப்படம் தற்போதுவரை ரூ.59.50 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

நீண்ட நாள்கள் கழித்து தனுஷ் நடித்த படம் 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியிருப்பதால் அவரது ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும், தனுஷ் திருச்சிற்றம்பலம் படம் மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறார். இனி அவர் தொட்டதெல்லாம் துலங்குமென்றும் அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர்.

மேலும் படிக்க | நாங்கள் விஜய் சேதுபதியின் ரசிகர்கள் - தொழிலதிபர் பெருமிதம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News