தமிழ் சினிமாவில் காதல் படங்களை இயக்கி, அந்த படங்களின் கதைகளுக்காகவும் வசனங்களுக்காகவும் பெயர் போனவர், கெளதம் வாசுதேவ் மேனன். இவரது பெயர் கூறும் உணர்ச்சி மிகு காதல் கதைகளுள் ஒன்று, விண்ணைத்தாண்டி வருவாயா. இதில், சிம்பு கதாநாயகனாகவும் த்ரிஷா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விண்ணைத்தாண்டி வருவாயா..


கோலிவுட் சினிமாவையும் காதல் கதைகளையும் பிரிக்கவே முடியாது. கணக்கிலடங்கா காதல் கதைகளை ரசிகர்கள் கண்டிருந்தாலும், அவர்களின் மனதில் நின்ற, மனதை கவர்ந்த கதைகள் வெகு சிலதான் இருக்கும். அப்படிப்பட்ட கதைகளில் ஒன்றுதான் விண்ணைத்தாண்டி வருவாயா. கார்த்திக்-ஜெஸ்ஸி இந்த கதாப்பாத்திரங்களை எத்தனைையோ பேர் ரீ-கிரியேட் செய்ய நினைத்தனர். ஆனால், அது முடியாமல் போனதற்கு காரணம், அத்தனை அழகாக கெளதம் வாசுதேவ் மேனன் அப்படத்தை செதுக்கிய விதம்தான். 


கிறிஸ்தவ பெண்ணாக வரும் ஜெஸ்ஸி மீது பார்த்த நொடியிலேயே காதல் வயப்படுகிறான், கார்த்திக். இவனது காதல், பிடிவாதமாக இருக்கும் ஜெஸ்ஸியை கொஞ்சம் கொஞ்சமாக நெகிழச்செய்து பின்னர் காதலில் விழ வைக்கிறது. அனைத்து காதல்களும் திருமணத்தில் முடிய வேண்டும் என்பது இல்லை. அப்படி திருமணத்தில் முடியவில்லை என்பதனால் அந்த காதல் தோல்வியடைந்ததாகவும் அர்த்தமாகி விடாது. இந்த ஆழமான, அழகான கருத்தினை இரண்டரை மணி நேர படம் மூலமாக ரசிகர்களுக்கு காண்பித்திருப்பார், ஜிவிஎம். இதில் கார்த்திக் ஆக சிம்புவும் ஜெஸ்ஸியாக த்ரிஷாவும் நடித்திருப்பார்கள்..இல்லை வாழ்ந்திருப்பார்கள். 


மேலும் படிக்க | லியோ to சித்தா-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?


முதலில் நடிக்க இருந்த ஹீரோ..


கெளதம் வாசுதேவ் மேனன், சமீப காலங்களாக பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி ஒரு பேட்டியின் போது, விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் சுவாரஸ்ய தகவல் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அப்போது, இப்படத்தில் ஹீரோவாக நடிக்க வைக்க முதலில் தேர்வு செய்யப்பட்டது சிம்பு இல்லை என்று கூறியிருக்கிறார். நடிகர் தனுஷைத்தான் முதலில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நாயகனாக நடிக்க வைக்க திட்டமிட்டிருந்ததாக கெளதம் வாசுதேவ் மேனன் கூறியிருக்கிறார். கேஷுவலான, பக்கத்து வீட்டு பையன் போன்ற தோற்றம் அவரிடம் இருந்ததால் அவரை நடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும் ஆனால் திட்டமிட்டபடி அவரை நடிக்க வைக்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார். படம் முழுவதுமாக முடிந்து அதை திரையில் பார்க்கும் போது, சிம்புவே அந்த கதாப்பாத்திரத்திற்கு பொருந்தி போனதாக அவர் தெரிவித்திருக்கிறார். 



தனுஷ்-சிம்பு பகை?


எம்.ஜி.ஆர்-சிவாஜி, ரஜினி-கமல், அஜித்-விஜய் தொடங்கி கோலிவுட்டில் பல பாேட்டி நடிகர்கள் உள்ளனர். அப்படிப்பட்ட போட்டி நடிகர்களாக கருதப்படுபவர்கள்தான், தனுஷ்-சிம்பு. இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் ஹீரோவாக நடிக்க வந்தனர். அதனாலேயோ என்னவாே இவர்கள் இருவருக்கும் போட்டி-பகை உள்ளதாக ரசிகர்கள் கருதி வந்தனர். தனுஷ் இப்படத்தில் நடிக்காமல் போனதற்கு காரணமாக கூட இது இருக்கலாம் என கூறப்படுகிறது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்னர் நடைப்பெற்ற ஒரு விழாவில் இருவரும் மேடையேறி “நாங்கள் எதிரிகள் என அனைவரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால் நாங்கள் உண்மையில் நண்பர்கள்தான்..” என்று கூறினர். 


துருவ நட்சத்திரம்..


கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படத்தின் ரிலீஸ் பல ஆண்டுகளாக தடைப்பட்டு இருந்தது. ஒரு வழியாக நாளை வெளியாக உள்ள இந்த படம், நாளை ரிலீஸாக உள்ள நிலையில் மீண்டும் சில பிரச்சனைகள் கிளம்பியுள்ளது. 


மேலும் படிக்க | கங்குவா படப்பிடிப்பில் விபத்து! சூர்யாவுக்கு என்ன ஆச்சு?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ