லியோ to சித்தா-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?

OTT Releases This Week: இந்த வாரம் ஓடிடி தளங்களில் பல புதிய படங்கள் வெளிவர இருக்கின்றன. அவற்றை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? இதோ முழு விவரம்.   

Written by - Yuvashree | Last Updated : Nov 23, 2023, 02:47 PM IST
  • இந்த வாரம் ஓடிடியில் பல படங்கள் வெளியாகின்றன.
  • குறிப்பாக லியோ, சித்தா உள்ளிட்ட படங்கள் லிஸ்டில் உள்ளன.
  • இவற்றை எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்?இதோ விவரம்.
லியோ to சித்தா-இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?  title=

இந்தியாவில் ஓடிடி தளங்களின் பெருக்கத்தால், பலர் தினம் தினம் புதுப்பது படங்களை பார்த்து மகிழ்கின்றனர். தியேட்டரில் பார்க்க தவறிய படங்களை டிவியில் ஒளிரபரப்பு செய்யும் வரை காத்திருந்த காலம் எப்போதாே மலையேறி விட்டது. திரையரங்குகளில் வெளியான 1 மாதத்திற்குள்ளாகவே பல புது படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகி வருகின்றன. இவற்றுடன் சேர்த்து, பல மொழியில் உருவான வெப் தொடர்களும் இந்த ஓடிடி தளங்களில் கிடைக்கப்பெறுகின்றன. அந்த வகையில், இந்த வாரம் புதிதாக ஓடிடியில் வெளியாகும் புது படங்கள் மற்றும் தொடர்களின் வரவுகள் குறித்து பார்க்கலாமா? 

லியோ:  (Leo OTT Release)

ரிலீஸிற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்திய படம், லியோ. விஜய் ஹீரோவாக நடித்திருந்த இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியிருந்தார். த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜூன், மிஷ்கின், கெளதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், மாத்யூ தாமஸ் உள்ளிட்டோர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். லோகி சினிமாட்டிக் யுனிவர்ஸில் ஒரு படமாக, லியோ இடம் பெற்றிருக்கிறது. விஜய், பல ஆண்டுகளுக்கு பிறகு சிறந்த நடிப்பை இப்படம் மூலம் வெளிப்படுத்தியுள்ளதாக ரசிகர்கள் மத்தியில் கருத்துகள் நிலவியது. லியோ படத்தை, நாளை முதல் (நவம்பர் 24) நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் காணலாம். 

டீமன்: (Demon OTT Release)

ரமேஷ் பழனிவேல் இயக்கத்தில் பேய் படமாக உருவாகியுள்ளது, டீமன். இதில் சச்சின் மணி, அபர்னதி, சுருதி பெரியசாமி, கும்கி அஷ்வின், ரவீனா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படம். கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி ரிலீஸ் செய்யப்பட்டது. ரிலீஸின் போது இப்படத்திற்கு பிரபல பத்திரிக்கைகள் நல்ல விமர்சனங்களையே கொடுத்தன. இந்த படம், ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாகிறது. 

சித்தா: (Chithha OTT Release)

எஸ்.யு அருண் குமார் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி வெளியான படம் சித்தா. இப்படம், சமீபத்தில் வெளியான படங்களியேலே மிகவும் நல்ல விமர்சனங்களை பெற்ற படமாக இருந்தது. இதில், சித்தார்த் ஹீரோவாக நடித்திருந்தார். மலையாள நாயகி நிமிஷா சஜ்ஜயன் இதில் நாயகியாக வந்தார். பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் படமாகவும், சித்தப்பா-மகள் இடையே இருக்கும் பாசத்தை பிரதிபலிக்கும் படமாகவும் ‘சித்தா’ இருந்தது. இந்த படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போய் கொண்டே இருந்தது, இந்த நிலையில், தற்போது வரும் நவம்பர் 28ஆம் தேதி முதல் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் சித்தா படத்தை பார்க்கலாம் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேலும் படிக்க | அடடா என்ன மனுஷன்யா.. லோகேஷ் கனகராஜ் குறித்து யாருக்கும் தெரியாத தகவல்கள்

சத்திய சோதனை:

இந்த ஆண்டு வெளியான காமெடி படங்களுள் ஒன்று, சத்திய சோதனை. இப்படம், கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இதில் பிரேம் ஜி, ரேஷ்மா பசுபுலேட்டி, லக்ஷமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். காமெடி-க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சோனி லிவ் தளத்தில் நாளை முதல் பார்க்கலாம். 

பிற படங்களும் தொடர்களும்..

மேற்கூறியவை மட்டுமன்றி, வெவ்வேறு ஓடிடி தளங்களில் பல புது படங்களும் தொடர்களும் வெளியாக உள்ளன. அவை என்னென்ன என்பதையும் அவற்றை எந்தெந்த தளங்களில் காணலாம் என்பதையும் இங்கு பார்ப்போம். 

>புலிமடா-மலையாளம்-நெட்ஃப்ளிக்ஸ்
>சாவீர்-மலையாளம்-சோனி லிவ்
>ஃபக்கரி 3-இந்தி-பிரைம்
>தி வேக்சின் வார்-இந்தி-ஹாட்ஸ்டார்
>தி வில்லேஜ்-தமிழ்-பிரைம் தொடர்
>சமோசா அண்ட் சன்ஸ்-இந்தி-ஜியோ சினிமா
>மை டீமன்-கொரியன்-நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
>ஓப்பன்ஹைமர்-ஆங்கிலம்-ப்ரைம் ரெண்ட்
>தி வெல்வெட் ராபிட்-ஆங்கிலம்-ஆப்பிள் டிவி
>ஸ்குயிட் கேம் தி சேலஞ்ச்-ஆங்கிலம்-நெட்ஃப்ளிக்ஸ்

மேலும் படிக்க | ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்காக எஸ்.ஜே.சூர்யா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News