கெளதம் வாசுதேவ் மேனனின் இந்த 5 படங்களை மிஸ் பண்ணாம பாத்துருங்க!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான படங்களுக்கென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.

 

1 /5

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்குனராக அறிமுகமான 'மின்னலே' படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.  இந்த படத்தில் மாதவன், ரீமா சென், அப்பாஸ், விவேக் மற்றும் நாகேஷ் ஆகியோர் நடித்திருந்தனர்.  ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் இன்றுவரை பலரின் ஃபேவரைட்டாக உள்ளது.  

2 /5

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளியான 'காக்க காக்க' படம் இயக்குனருக்கு பெரியளவில் பெயரை பெற்றுத்தந்தது.  இந்த ஆக்ஷன் கதையம்சம் கொண்ட திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.  அன்புச்செல்வன் ஐபிஎஸ் மற்றும் மாயா கதாபாத்திரங்கள் இன்றுவரை பலரின் நெஞ்சங்களில் நிலைத்து நிற்கிறது.  

3 /5

கடந்த 2006ம் ஆண்டு கெளதம் மேனன்-கமல்ஹாசன் கூட்டணியில் வெளியான 'வேட்டையாடு விளையாடு' படம் பாக்ஸ் ஆபிசில் பெரியளவில் வெற்றியினை பெற்றது.  இப்படத்தில் கமல்ஹாசன், ஜோதிகா,கமலினி முகர்ஜி ஆகியோர் நடித்திருந்தனர்.  ஹாரிஸ் ஹெயராஜ் இசை படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்தது.  

4 /5

கெளதம் மேனனின் கேரியரில் ஒரு எவெர்க்ரீன் படமாக அமைந்தது 'விண்ணைத்தாண்டி வருவாயா'.  சிம்பு மற்றும் த்ரிஷா ஆகியோரது நடிப்பில் வெளியான இந்த படம் இளைஞர்களின் கவனத்தை பெரிதும் கவர்ந்தது.  இப்படத்திலிருந்து கார்த்திக்-ஜெஸ்ஸி எக்காலத்திலும் பலரும் விரும்பக்கூடிய பெயர்களாக மாறிவிட்டது.  

5 /5

கடந்த 2015ம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'என்னை அறிந்தால்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்தில் அஜித், திரிஷா, அருண் விஜய் மற்றும் அனுஷ்கா அனிகா  ஆகியோர் நடித்திருந்தனர்.  இப்படம் பாக்ஸ் ஆபீசில் நல்ல வசூலை ஈட்டியது.