ரன்வீர் சிங்கின் நடித்த திரைப்படமான 83 படம் 1983-ல் நடைபெற்ற உலகக் கோப்பை வெற்றியை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.  இப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 24ம் தேதி திரையரங்கில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது.  83 படத்தின் ஓடிடி உரிமையை நெட்ஃபிக்ஸ், ஹாட்ஸ்டார் நிறுவனம் கைப்பற்றியது.  இந்நிலையில் இப்படத்தின் உரிமையை கோரி தயாரிப்பாளர்களில் ஒருவரான மேட் மேன் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.  இதை எதிர்த்து வாதிட்ட ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட், எங்களிடம் தான் 83 படத்தின் உரிமை உள்ளது என்று கூறியது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | 'வாடிவாசல்' படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஆரம்பம்?


ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் ஸ்டுடியோ மற்றும் மற்ற இணை தயாரிப்பாளருக்கு எதிராக மேட் மேன் பிலிம் வென்ச்சர்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை நீதிபதி ரியாஸ் சாக்லா அமர்வு விசாரித்தது. வெவ்வேறு தரப்பினருக்கு இடையே உள்ள ஒப்புதல் விதிமுறைகள் / ஒப்புதல்கள் தான் இந்த வழக்கில் உள்ள உண்மையான பிரச்சனை என்று கோர்ட் குறிப்பிட்டது. மேட் மேன் ஃபிலிம் வென்ச்சர்ஸ், ஒப்பந்த விதிமுறைகளை கோர்ட்டில் தெளிவுபடுத்தியது.  அதில் தங்கள் தரப்பில் (37.5%), ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் (37.5%) மற்றும் விப்ரி மீடியா பிரைவேட் லிமிடெட் லிமிடெட் (25%) இடையே பிரிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.  மேட் மேன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் விராக் துல்சாபுர்கர், ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்துக்களின்படி, முதல் 10 ஆண்டுகளுக்கு ரிலையன்ஸ் நிறுவனத்திடம் இருந்து நிகர வசூலில் ஒரு சதவீதத்தைப் பெற மேட் மேன் நிறுவனத்திற்கு உரிமை உண்டு என்று வாதிட்டார். அத்தகைய பணம் முழுமையாகப் பெறப்படாத வரை, படத்தின் டிஜிட்டல் அல்லது சாட்டிலைட் உரிமையைப் பயன்படுத்துவதற்காக ஒப்புதல் அளிக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று அவர் கூறினார்.



ரிலையன்ஸ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வெங்கடேஷ் தோண்ட், ஹாட்ஸ்டார் மற்றும் நெட்ஃபிளிக்ஸ் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களுக்கு எந்த தடங்களும் இல்லை என்று ஆரம்பத்தில் வாதிட்டார். திரையரங்கத்தில் வெளியான நாளிலிருந்து 10 ஆண்டுகளுக்கு உலக அளவில் 83 படத்திற்கான அனைத்து திரையரங்குகள் அல்லாத உரிமைகளை ரிலையன்ஸ் தொடர்ந்து வைத்திருக்கும் என்று சமர்பித்தார்.  மேட் மேன் மற்றும் ரிலையன்ஸ் இடையேயான பிரச்சனைகளுக்கு முன்னதாகவே தங்களுக்கு உரிமைகள் வழங்கப்பட்டதாக OTT தளங்கள் வாதிட்டன. ரிலையன்ஸ் பிரத்தியேக உரிமைகளைப் பெற்ற 10 ஆண்டுகளுக்குப் பிறகுதான் மேட் மேனின் ஒப்பந்த உரிமைகள் தொடங்கும் என்றும் அவர்கள் வாதிட்டனர். 


அனைத்து தரப்பு விவாதங்களையும் பரிசீலித்த நீதிபதி சாக்லா, OTT இயங்குதளங்களான Netflix மற்றும் Star நிறுவனங்கள் டிஜிட்டல் மற்றும் செயற்கைக்கோள் உரிமைகளை பயன்படுத்த தடை இல்லை என்று தீர்ப்பு வழங்கினார்.  ரிலையன்ஸ் பிரத்தியேக உரிமைகள், முதல் 10 ஆண்டுகள் காலாவதியான பின்னரே மேட் மேன் திரைப்படத்தின் மீதான அதன் உரிமைகளைப் பயன்படுத்தத் தொடங்க முடியும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.  இதனால் விரைவில் 83 படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது.


மேலும் படிக்க | படுதோல்வியடைந்த ராதே ஷ்யாம்..இத்தனை கோடி நஷ்டமா?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR