படுதோல்வியடைந்த ராதே ஷ்யாம்..இத்தனை கோடி நஷ்டமா?

அதிக பொருட்செலவில் பிரம்மாண்டமாக வெளியான ராதே ஷ்யாம் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் தோல்வியடைந்துள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 20, 2022, 10:30 AM IST
  • கடந்த வாரம் ராதே ஷ்யாம் படம் வெளியானது.
  • அதிக பொருட்செலவில் இப்படம் எடுக்கப்பட்டது.
  • எதிர்பார்த்த வசூலை இப்படம் பூர்த்தி செய்யவில்லை.
படுதோல்வியடைந்த ராதே ஷ்யாம்..இத்தனை கோடி நஷ்டமா? title=

பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த 'ராதே ஷ்யாம்' திரைப்படம் மார்ச் 11 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது.  ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவான இந்த படத்தில் சத்யராஜ், பாக்யாஸ்ரீ, ஜெகபதி பாபு, பிரியதர்ஷினி, முரளி சர்மா, சத்யன், ஜெயராம், தலைவாசல் விஜய் போன்ற பலர் நடித்திருந்தனர்.  பாகுபலி பட வெற்றியை தொடர்ந்து பிரபாஸிற்கு அதிக ரசிகர்கள் கூட்டம் உருவாகியுள்ளது, இப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியே ராதே ஷ்யாம் படத்தில் பிரபாஸ் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.  இதனை பான் இந்தியா படமென்றும், 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்து படம் உருவாக்கப்பட்டதாகவும் கூறப்பட்ட இந்த படம் தற்போது படுதோல்வியை சந்தித்து இருக்கிறது.

radheshyam

மேலும் படிக்க | ‘RRR’ க்கு இப்படியொரு அரசு சலுகையா?!

பிரபாஸின் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்து கொண்டிருந்த இந்த படம் அவரின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருப்பதாக கூறப்படுகிறது.  உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகள் இப்படத்திற்கான உரிமையை 200 கோடி ரூபாய்க்கு வாங்கிய நிலையில், முதல் வாரத்தில் இப்படம் 78 கோடி ரூபாயை வசூல் செய்தது, இறுதியாக இப்படம் 85 கோடி ருபாய் தான் வசூல் செய்திருக்கிறது.  இப்படம் தற்போது 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக தெரிகிறது.

இப்படம் வெளியான முதல் நாளிலேயே கலவையான விமர்சனங்களை பெற்றது.  தெலுங்கில் இந்த படம் வெளியான முதல் வாரத்தில் 63 கோடி வசூல் செய்திருந்தது, ஆனால் அடுத்தடுத்து திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் திரையரங்குகள் காத்து வாங்கியது.  இந்த பிரம்மாண்ட திரைப்படமானது உலக அளவில் முதல் வாரத்தில் 77.86 கோடி ருபாய் தான் வசூல் செய்திருக்கிறது.  இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் தோல்வியை சந்தித்து இருக்கிறது.  இதுவரை திரையரங்குகளில் இவ்வளவு பிரம்மாண்டமாக அதிக பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்திய திரைப்படங்கள் இந்த அளவு தோல்வியை சந்தித்ததில்லை என்று கூறப்படுகிறது.

'ராதே ஷ்யாம்' படம் வெளியான அதே தினத்தில் 'தி காஷ்மீர் பைல்ஸ்' படமும் போட்டியாக களமிறங்கியங்கியது.  இந்த படம் நாளுக்கு நாள் பாக்ஸ் ஆபிசில் அற்புதங்களை செய்து நன்கு கலெக்ஷனை அள்ளி வருகிறது.  இப்படம் 200 கோடி வசூல் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இது ராதே ஷ்யாமின் ஹிந்தி வெளியீட்டையும் பாதிக்கும் என்று கருதப்படுகிறது.

மேலும் படிக்க | ஸ்டைல் ஹா, கெத்தா ரீஎண்ட்ரி கொடுத்த நடிகை பாவனா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News