இந்த வாரம் ஓடிடியில் தெறிக்கவிடும் புது படங்கள்! எதை, எந்த தளத்தில் பார்க்கலாம்?
This Week Latest OTT Releases In Tamil : இந்த வாரம் ஓடிடியில் வெளியாக இருக்கும் புதுப்படங்களின் லிஸ்டை இங்கு பார்க்கலாமா?
This Week Latest OTT Releases In Tamil : ஓடிடி தளங்களின் பெருக்கத்தை ஒட்டி, திரையரங்குகளில் வெளியாகும் சில படங்களும் கூட விரைவில் ஓடிடி தளங்களில் வெளியாக ஆரம்பித்து விட்டன. திரையரங்குகளில் தனக்கு பிடித்த படங்களை பார்க்க தவறிய சினிமா விரும்பிகள், இதனை குடும்பத்துடன் ஓடிடி தளங்களில் பார்க்கின்றனர். வாரா வாரம் புதுப்புது படங்கள் வெளியாவது வாடிக்கையாகி வருவது போல, இந்த வாரமும் பல சூப்பர் ஹிட் புதுப்படங்கள் ஓடிடி தளங்களில் வெளியாகிறது. அவற்றை, எந்த தளத்தில் எப்படி பார்க்கலாம்? இங்கு அது குறித்து முழு விவரத்தையும், ஓடிடியில் வெளியாகும் படங்களின் லிஸ்டையும் பார்க்கலாம்.
ஜூலை 19ஆம் தேதி வெளியாகும் படங்கள்:
ஆடுஜீவிதம்:
பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியான படம், ஆடுஜீவிதம். உண்மை கதையை தழுவி உருவான நாவலை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டிருந்த படம் இது. இந்த படத்தின் வேலைகள் முடிய மட்டும் 16வருடங்கள் தேவைப்பட்டது. இதற்காக படத்தின் நாயகன் இரண்டு முறை தனது உடல் அமைப்பை மாற்ற வேண்டி இருந்தது. இவருக்கு ஜோடியாக அமலா பால் இப்படத்தில் நடித்திருப்பார். இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிப்போனதை தொடர்ந்து, ஒரு வழியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வரும் 19ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
அஞ்சாமை:
விதார்த், வானி போஜன் நடிப்பில் உருவான படம், அஞ்சாமை. குடும்ப கதையான உருவான இந்த படம், தியேட்டர்களில் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது. இந்த படத்தை, சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் நாளை முதல் பார்க்கலாம்.
தி அக்காளி:
நாசர், ஸ்வயம் சித்ஹ்டா, வினோத் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த படம், தி அக்காளி. பேய் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டிருந்த இப்படம், ஒரு போலீஸ் அதிகாரியின் கண் வழியே பார்க்கப்படுவது போல படமாக்கப்பட்டிருந்தது. கடந்த மே 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், தற்போது ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜூலை 19ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
ரயில்:
வட மாநில தொழிலாளர்களின் வாழ்க்கையை வைத்து எடுக்கப்பட்டிருந்த படம், ரயில். இந்த படத்தில் பல புதுமுகங்கள் இடம் பெற்றிருந்தனர். இதனை பாச்கர் சக்தி இயக்கியிருந்தார். இப்படம் குறித்து பெரிதாக யாருக்கும் தெரியாததால் படத்திற்கு அவ்வளவாக திரையரங்கிற்கு கூட்டம் வரவில்லை. இந்த படம், தற்போது டெண்ட்கொட்டா தளத்தில் வெளியாக இருக்கிறது. இதனை, நாளை முதல் பார்க்கலாம்.
லேண்ட் ஆஃப் பேட்:
ஆங்கிலத்தில் உருவாகியிருக்கும் படம், லேண்ட் ஆஃப் பேட். இதில் லிய்யம் ஹெம்ஸ்வர்த், மைலோ உள்ளிட்ட பல பிரபல ஹாலிவுட் கலைஞர்கள் நடித்திருக்கின்றனர். இந்த படம், நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. இதனை நாளை முதல் பார்க்கலாம்.
பிற ஓடிடி ரிலீஸ்கள்:
மேற்கூறியவை தவிர, இன்னும் பல படங்களும் தொடர்களும் வரும் 19ஆம் தேதி ஓடிடி தளங்களில் வெளியாக இருக்கின்றன. அவற்றின் முழு விவரம்:
>ஃபைண்ட் மீ ஃபாலிங் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ்
>பாஹி கரானா - தெலுங்கு - ஜீ 5 தொடர்
>பார்ஜாக் - இந்தி - ஜீ 5 தொடர்
>தி கே 2- கொரியன் - அமேசான் ப்ரைம் தொடர்
>ரெபெல் - ஃப்ரென்ச் - அமேசான் ப்ரைம் தொடர்
>ஸ்கை வாக்கர்ஸ் அ லவ் ஸ்டோரி - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ்
>நாகேந்திரன்ஸ் ஹனிமூன்ஸ் - மலையாளம் - ஹாட்ஸ்டார் தொடர்
>திருபுவன மிஷ்ரா சி ஏ டாப்பர் - இந்தி - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
>மிஸ்டர் பிக் ஸ்டஃப் - ஆங்கிலம் - ஜியோ சீரீஸ்
>தி வாட்சர்ஸ் - ஆங்கிலன்ம் - பிஎம்எஸ்
>ஐஎஸ்எஸ் - ஆங்கிலம் - ஜியோ சினிமா
>தி ஸ்பை தி எட்டெர்னல் சிட்டி - ஆங்கிலம் - அமேசான் ப்ரைம்
>ஜென் சி - சீன மொழி - அமேசான் ப்ரைம்
>மியூசிக் ஷாப் மூர்த்தி - தெலுங்கு - அமேசான் ப்ரைம்
>அர்காடியன் - ஆங்கிலம் - லையன்ஸ்கேட் ப்ளே
>தி டீப் டார்க் - ஃப்ரென்ச் - பிஎம்எஸ்
>லேடி இன் தி லேக் - ஆங்கிலம் - ஆப்பிள் டிவி சீரீஸ்
>ஹாமிசைட் லாஸ் ஏஞ்சல்ஸ் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் சீரீஸ்
>யங் வுமன் அண்ட் தி சீ - ஆங்கிலம் - ஹாட்ஸ்டார்
>சைமான் பைல்ஸ் ரைசிங் - ஆங்கிலம் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
>மாஸ்டர் ஆஃப் தி ஹவுஸ் - தாய் மொழி தொடர் - நெட்ஃப்ளிக்ஸ் தொடர்
>500 டேஸ் ஆஃப் எஸ்கோபார் - கொலம்பியன் - நெட்ஃப்ளிக்ஸ் டாக்குமெண்டரி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ