சித்தார்த் குமார் திவாரி இயக்கத்தில் உருவான ஹிந்தி மொழி சயின்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் 'எஸ்கேப் லைவ்', இப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தில் சித்தார்த், ஜாவீத் ஜாபரி, ஸ்வேதா திரிபாதி, ஸ்வஸ்திகா முகர்ஜி, பிளபிதா போர்த்தாகூர் போன்ற நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.  அடுத்ததாக சைதன்யா டன்டலூரி இயக்கத்தில் உருவான தெலுங்கு மொழி ஆக்ஷன் த்ரில்லர் படமான 'பாலா தண்டனானா' இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | தனுஷூடனானா படுக்கையறை காட்சி குறித்த கேட்ட நெட்டிசன் - விளாசிய மாளவிகா


கொரட்டாலா சிவா இயக்கத்தில் ராம் சரண், சிரஞ்சீவி, பூஜா ஹெக்டே, சோனு சூட், நாசர் போன்ற பலர் நடிப்பில் வெளியான 'ஆச்சார்யா' படம் அமேசான் ப்ரைம் வீடியோவில் இன்று வெளியாகி உள்ளது.  அதே தேதியில் சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கத்தில் தமிழில் உருவான நகைச்சுவை கலந்த திரைப்படமான 'ஹாஸ்டல்' படம் சிம்ப்ளி சவுத் ஓடிடி தளத்தில் வெளியாகிறது, இதில் அசோக் செல்வன் மற்றும் ப்ரியா பவானி ஷங்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.



கவுதம் திண்ணனுரி இயக்கத்தில் உருவான ஹிந்தி மொழித்திரைப்படமான 'ஜெர்சி' படம் நெட்ப்ளிக்ஸ் ஓடிடி இயங்குதளத்தில் இன்று வெளியாகுகிறது.  பின்னர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் உருவான மலையாள மொழி திரைப்படமான 'தி டுவெல்த் மேன்' திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் இன்று வெளியாகுகிறது.  மேலும் எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டிஆர் நடிப்பில் வெளியாகி வெற்றிநடைபோட்ட 'ஆர்ஆர்ஆர்' திரைப்படம் இன்று ஜீ5 தளத்தில் வெளியாகுகிறது.



மேலும் படிக்க | இயக்குனர் அவதாரம் எடுத்த ஏ.ஆர்.ரஹ்மான்! ஹீரோ யார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR