பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் சல்மான் கான். இவர் தனது குடும்பத்துடன் மும்பை பாந்ரா பேண்ட் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள கேலக்சி என்ற அடுக்குமாடி கட்டடத்தில் வசித்துவருகின்றார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தச் சூழலில் அவரது தந்தையும் பிரபல திரைக்கதை எழுத்தாளருமான சலீம் கான் காலையில் தான் வழக்கமாக நடை பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் நடைபயிற்சி செய்துவிட்டு ஓய்வில் இருந்தார்.


அப்போது அவரது அருகில் கடிதம் ஒன்று கிடந்தது. அதை எடுத்து பார்த்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில்,  “நீங்களும், உங்கள் மகன் சல்மான் கானும் பாடகர் சித்து மூஸ்வாலாவைப்போல் சுட்டுக்கொல்லப்படுவீர்கள்” என குறிப்பிடப்பட்டிருந்தது.


மேலும் படிக்க | முன்னாள் காதலனுடன் பழகிய பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய பெண்!


இதனையடுத்து இதுதொடர்பாக காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.அதனடிப்படையில் காவல் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கி சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துவருகின்றனர். மேலும் சல்மான் கானின் வீட்டுக்கு காவல் துறை பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.



முன்னதாக பாடகரும், காங்கிரஸ் கட்சி சார்பில் பஞ்சாப் மான்சா தொகுதியில் போட்டியிட்டு தோல்விடைந்த சித்து மூஸ்வாலா மான்சா மாவட்டத்தில் கடந்த 29ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.


மேலும் படிக்க | நடிகர் விஜயின் படத்தை பார்க்காதீர்கள்: மதுரை ஆதினம்


இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் அவர் இறப்பதற்கு முதல் நாள்தான் அவருக்கு கொடுக்கப்பட்டிருந்த பாதுகாப்பை பஞ்சாப் அரசு விலக்கிக்கொண்டதால் அந்த அரசு மீது கடுமையான விமர்சனங்களும் வைக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும்,  உடற்கூராய்வு முடிந்த பிறகு மூஸ்வாலாவின் உடல் அவரது தந்தையிடம்  ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் அவருடைய உடல் சொந்த கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டது. அங்கு அவரது இறுதிச் சடங்கு இன்று (மே 31) நடைபெற்று சித்துவுக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. இதனையொட்டி, சித்து மூஸ்வாலாவின் ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள்  கிராமத்தில் குவிந்தனர். 



இதற்கிடையே சித்து மூஸ்வாலாவுக்கு பணம் பறிக்கும் கும்பல்கள் பல தொடர்ந்து மிரட்டல் விடுத்துவந்ததாகவும், அந்தக் கும்பலில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் மீது அதிக சந்தேகம் இருப்பதாகவும், அதே கும்பல்தான் சல்மான் கானுக்கும் மிரட்டல் விடுத்திருக்கலாம் எனவும் கருதப்படுகிறது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR