லைகா புரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரஹமான் இசையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், அக்ஷ்ய் குமார், ஏமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டகளின் பிரம்மாண்டமாகக் கருதப்படும் 2.0 படத்தின் இசை வெளியீடு விழா துபாயில் நேற்று நடைபெற்றது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிரமாண்டமாக தயாரிக்கப்பட்ட 2.0 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்‌ஷய்குமார், ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர் ஷங்கர், தயாரிப்பாளர் மற்றும் டெக்னிஷீயன் கலந்துக்கொண்டனர். 


அப்பொழுது பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறியதாவது:- நடிகர் ரஜினிகாந்த், தனது பேச்சை தொடங்குவதற்கு முன்பு 'நமஸ்காரம், நமஸ்தே, அஸ்லாமு அலைக்கும்' எனக் கூறி தனது பேச்சை தொடங்கினார். மிகுந்த கரகோஷம் எழுப்பினார்கள். 


கடவுள் தன் பக்கம் இல்லை என்றால், நான் இவ்வளவு வெற்றிகளைப் பெற்றிருக்க முடியாது. என் வெற்றிக்கு காரணம் கடவுளின் ஆசீர்வாதம் தான். பணம் புகழ் பெரிய விசியம் இல்லை. அதைவிட மன அமைதிதான் ரொம்ப முக்கியம். சமூகவலைதளங்களில் படத்தை கீழ்தரமாக விமர்சிப்பதை தவிர்க்க வேண்டும். யார் மனதையும் புண்படுத்த வேண்டாம். நமது கலாச்சாரத்தையும், மரபையும் புரிந்து கொண்டு நடக்க வேண்டும் எனக் பேசினார். அவரது பேச்சுக்கு மிகப்பெரிய வரவேற்பும் கைத்தட்டலும் கிடைத்தன.