தெலுங்கு நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி!
தெலுங்கு திரைப்பட நடிகர் ராம்சரணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
எதிர்பாராத விதமாக, தெலுங்கு சூப்பர் ஸ்டார் ராம்சரண் கொடிய கொரோனா வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்ததாக அறிவித்துள்ளார். இதை ட்விட்டரில் அறிவித்த அவர், தன்னுடன் தொடர்பு கொண்ட நபர்களை சோதனைக்கு உட்படுத்துமாறு கோரியுள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (Coronavirus) பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது. விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.
ALSO READ | Corona தொற்றை ஓட ஓட விரட்டிய சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி... No covid-19!
அந்தவகையில் தற்போது தெலுங்கு திரைப்பட நடிகர் ராம்சரணுக்கு (Ram Charan) கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில்.,
“எனக்கு கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இல்லாத நிலையில் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடந்த சில தினங்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள், பரிசோதனை செய்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது உடல்நிலை மேம்படுவது குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியிடப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
ராம்சரன் பல திரைப்பட நிகழ்வுகளில் கலந்து கொண்டிருந்தார் மற்றும் ராஜமௌலியின் (S. S. Rajamouli) பெரிய பட்ஜெட் திரைப்படமான RRR படப்பிடிப்பின் போது படப்பிடிப்பில் இருந்தார்.
ALSO READ | ராஜமெளலியின் 'RRR' திரைப்பட படபிடிப்பின் கலக்கும் சண்டைக் காட்சிகள் வைரல்…
அண்மையில் ஆச்சார்யா படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்கு முன்பு பரிசோதனை செய்தபோது சிரஞ்சீவிக்கு (Chiranjeevi) கொரோனா பாதிப்பு இருப்பது தெரிய வந்தது. அவருக்கு அறிகுறிகள் எதுவும் இல்லாததால் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு குணமடைந்தார்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR