அதிக வசூல் செய்த டாப் 5 மலையாள படங்கள்..இந்த படம் இல்லையா..
இந்திய சினிமாவில் நான்காவது பெரிய திரைப்படத் துறையாக மோலிவுட் உள்ளது. அற்புதமான கதைக் கருத்துக்கள் மற்றும் வியக்கத்தக்க நடிப்புத் திறன்களுடன், கடந்த தசாப்தங்களாக இந்தத் துறை பல பிளாக்-பஸ்டர் ஹிட் திரைப்படங்களை வழங்கியுள்ளது.
இந்திய சினிமாவில் நான்காவது பெரிய திரைப்படத் துறையாக மோலிவுட் உள்ளது. அற்புதமான கதைக் கருத்துக்கள் மற்றும் வியக்கத்தக்க நடிப்புத் திறன்களுடன், கடந்த தசாப்தங்களாக இந்தத் துறை பல பிளாக்-பஸ்டர் ஹிட் திரைப்படங்களை வழங்கியுள்ளது. இந்தியாவில் பிளாக்-பஸ்டர் ஹிட் தந்த இந்த படங்கள், பின்னர் பல நாடுகளில் வெளியிடப்பட்டது. குறிப்பாக ஜி.சி.சி நேஷன்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட இடங்களில் மலையாளத் திரைப்படங்களின் தங்கச் சுரங்கமாக மாறிவிட்டன. எனவே லூசிஃபர் முதல் ஹிருதயம் வரை, GCC இல் அதிக வசூல் செய்த மலையாளத் திரைப்படங்களின் பட்டியலை இங்கே காண்போம்.
1. லூசிஃபர்
மலையாளத்தில் வெளிவந்த படங்களில் அதிக வசூல் செய்த திரைப்படம் 'லூசிஃபர்'. மோகன்லால் முக்கிய வேடத்தில் நடித்த இந்தப் படம், நடிகரும் தயாரிப்பாளருமான பிருத்விராஜ் இந்த படத்தை இயக்கி இருந்தார். லூசிபர் மலையாள பாக்ஸ் ஆபிஸில் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. குறிப்பாக மோகன்லால் ரசிகர்களுக்கு இந்த படம் தீனி போடும் வகையில் இருந்தது. மோகன்லால் தவிர, இந்த படத்தில் விவேக் ஓபராய், இந்திரஜித் சுகுமாரன், டொவினோ தாமஸ் மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். திரையரங்குகளில் வெளியான இப்படம் இந்திய பாக்ஸ் ஆபிஸில் ₹200 கோடிக்கு மேல் வசூலித்தது. இது தவிர, ஜி.சி.சி.யில் இருந்து 39.6 கோடிகளை படம் ஈட்டியது. புலிமுருகனுக்குப் பிறகு 100 கோடி கிளப்பில் நுழைந்த நடிகர் மோகன்லாலின் இரண்டாவது படம் லூசிஃபர் ஆகும்.
2. புலிமுருகன்
வைஷகன் இயக்கிய 'புலிமுருகன்' படம் மலையாள சினிமாவில் அதிக வசூல் செய்த படம். படம் வெளியாகி ஆறு வருடங்கள் ஆன பிறகும் படம் முதல் இடத்தில் உள்ளது. கேரளா பாக்ஸ் ஆபிஸில் மட்டும் இப்படம் ரூ 85.7 கோடிகளை ஈட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வளைகுடா நாடுகளில் வெளியான இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 33.25 கோடிகளை வசூலித்துள்ளது.
3. பீஷ்ம பர்வம்
மம்முட்டியின் 'பீஷ்மபர்வம்' 2022 இல் வெளியான மலையாளத் திரைப்படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாகும். இந்த படம் திரையரங்குகளில் நல்ல வரவேற்பைப் பெற்றது மற்றும் பாக்ஸ் ஆபிஸில் இருந்து சுமார் ரூ.45 கோடிகளை ஈட்டியது. இப்படம் ரிலீஸான 5 நாட்களிலேயே கேரளா பாக்ஸ் ஆபிஸில் ரூ 25 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
4. பிரேமம்
பிரேமம் 2015-ம் ஆண்டில் வெளிவந்த மலையாள திரைப்படமாகும். அல்போன்சு புத்திரன் இயக்கிய இத்திரைப்படத்தில் நிவின் பவுலி மற்றும் சாய் பல்லவி வுடன் மடோனா செபாஸ்டியன் அனுபமா பரமேசுவரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் 2015 ஆம் ஆண்டின் பிளாக்-பஸ்டர் ஹிட் படங்களில் ஒன்றாகும். மொத்தம் ரூ.4 கோடியில் தயாரிக்கப்பட்ட இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.60 கோடி வசூலித்தது.
5. குருப்
துல்கர் சலாம் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'குருப்' திரைப்படம் சமீப காலங்களில் மலையாள சினிமாவில் இதுவரை வெளிவந்த சிறந்த கிரைம் த்ரில்லர் திரைப்படங்களில் ஒன்றாகும். ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கிய இப்படம் உலக பாக்ஸ் ஆபிஸில் ரூ 35 கோடியைத் தாண்டியது. வியக்க வைக்கும் நடிப்புத் திறமையாலும், அசத்தலான தோற்றத்தாலும், நடிகர் துல்கர் சல்மான் சினிமா ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
மேலும் படிக்க | எப்போது பார்த்தாலும் சலிக்காத டாப் 10 Sci-Fi படங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ