OTT- இல் வரவிருக்கும் தமிழ்த் திரைப்படங்கள்: 2023 ஆம் ஆண்டு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஆண்டாக இருக்கும். இந்த ஆண்டு ஏகப்பட்ட படங்கள் வெளிவரவுள்ளன. எடுத்துக்காட்டாக இந்த வாரமே ஓடிடி தளங்களில் பல வெளியீடுகள் இருந்தன. இந்த ஆண்டு உங்களை மகிழ்விக்க பல்வேறு ஓடிடி தளங்களில் பல படங்கள் வரவுள்ள நிலையில், இன்னும் சில நாட்களில் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்புகளை பெற்றுள்ள ஓடிடி படங்களில் சிலவற்றை இங்கே காணலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

OTT 2023 இல் வரவிருக்கும் தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல்


நல்ல தமிழ் திரைப்படங்கள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வாரமும் புதிய திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அமேசான் ப்ரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ், ஆஹா, சோனி லிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களில் இன்னும் சில நாட்களில் வெளிவரவுள்ள படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


1. டிரைவர் ஜமுனா


இந்த படம் ஜனவரி 20, 2023 அன்று வெளியாகும். இது ஆஹா தமிழில் வெளியாகவுள்ளது. 
நடிகர்கள்- ஆடுகளம் நரேன், ஐஸ்வர்யா ராஜேஷ், வைபவ் கோஹில்
சென்னையின் புறநகரில் வசிக்கும் பெண் வண்டி ஓட்டுநரான ஜமுனா, படத்தின் கதைக்களத்தின் மையப் புள்ளியாக வருகிறார். ஒரு நாள் அவர் வாழ்வில் எதிர்பாராத சில சவால்களை சந்திக்கிறார். அவற்றிலிருந்து தன்னை அவர் பாதுகாத்துக் கொள்ள முயலும்போது, என்ன நடக்கிறது? இதுதான் இப்படத்தின் விறுவிறுப்பான கதைக்களமாக அமைந்துள்ளது. 


2. ராங்கி


இந்த படம் ஜனவரி 30, 2023 அன்று வெளியாகும். இது Sun NXT இல் வெளியாகவுள்ளது
நடிகர்கள்- த்ரிஷா கிருஷ்ணன், லிசி ஆண்டனி, வக்கார் கான், 
தையல் நாயகி என்ற ஆன்லைன் செய்தி நிலையத்தின் நிருபரான தையல் நாயகியை மையமாகக் கொண்ட கதை இது. மிகவும் சுவாரசியமான கதைக்களத்துடன் வரும் இந்த படத்துக்காக ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள். 


3. நசீர்


இந்த படம் ஜனவரி 2023 இறுதியில் வெளியாகும். இது Sony LIV இல் வெளியாகும்
நடிகர்கள்- பாலசுப்ரமணியன், வளவனே குமரனே, காயத்திரி, அப்துல் ஜாபர், ஜென்சன் திவாகர், ஜெய்குமார், மீனா, விக்ரமாதித்யன் நம்பி, நிவேதிதா, பிரபஞ்சன், பிரசன்னா, யாஸ்மின் ரஹ்மான், ராஜேஷ், பரத் ராவல், சுதா ரங்கநாதன், வள்ளி ரேவதி, ரிஃபா, சாகித்யா.
நசீர், ஒரு நடுத்தர வயது விற்பனையாளர். அவர் தனது மனைவி தாஜ், தாய் பாத்திமா, மருமகன் இக்பால் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் நெரிசலான சேரியில் வசிக்கிறார். அவர் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களின் தொகுப்புதான் இந்த படம். 


மேலும் படிக்க | விஜய் ஆண்டனிக்கு மேலும் ஒரு சர்ஜரி: ஐசியூவில் எப்படி இருக்கிறார்?


4. நயன்தாரா- பியாண்ட் தி ஃபேரிடேல்


இந்த படம் ஜனவரி 2023 இறுதியில் வெளியாகும். இது நெட்ஃபிக்ஸ் தளத்தில் வெளியாகும்.
நடிகர்கள் - நயன்தாரா, விக்னேஷ் சிவன்
பிரபல நடிகை நயன்தாராவின் திருமணம் தான் இந்த கதையின் பொருளாகும். இவர் சமீபத்தில் பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனை பிரம்மாண்டமான முறையில் திருமணம் செய்து கொண்டார். இந்தப் படம் பார்வையாளர்களுக்கு அவர்களின் வாழ்க்கை, அவர்களின் திருமணம் பற்றிய பல சுவாரசிய தகவல்களை அள்ளிக்கொடுக்கும். 


5. பார்டர்


இந்த படம் ஜனவரி 2023 இறுதியில் வெளியாகும். இந்த படம் எந்த தளத்தில் வெளியாகும் என்பது இன்னும் அறிவிக்கப்படவில்லை.
நடிகர்கள் - அருண் விஜய், ரெஜினா கசாண்ட்ரா, ஸ்டெஃபி படேல், பகவதி பெருமாள், சந்திரசேகர் கோனேரு
அறிவழகன் வெங்கடாசலம் இந்த ஸ்பை த்ரில்லர் திரைப்படத்தை தமிழ் மொழியில் இயக்குகிறார். ஆல் இன் பிக்சர்ஸ் என்ற பெயரில் பணிபுரியும் விஜய ராகவேந்திரா தயாரிப்புப் பொறுப்பை வகிக்கிறார்.


பயங்கரவாதிகளின் தீய மற்றும் பொல்லாத திட்டங்களை முறியடிக்க முயலும் ஒரு ராணுவ தளபதியின் வாழ்க்கை முறையை மையமாக கொண்டது கதைக்களம், அவரது வாழ்க்கை முறையையும் அவர் சந்திக்கும் விஷயங்களையும் கூறும் இப்படத்தில் நல்ல மோதலையும் இணையான காதல் கதையையும் எதிர்பார்க்கலாம்.


6. கோஸ்டி


இந்த படம் ஜனவரி 2023 இறுதியில் வெளியாகும். இது ZEE5 இல் வெளியாகும்.
நடிகர்கள் - யோகி பாபு, காஜல் அகர்வால்
படத்தின் இயக்குனர் கல்யாண். இது ஒரு இளம் பெண் தனது மறைந்த தந்தையின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற காவல்துறை அதிகாரியாக முடிவு செய்யும் கதையாகும். பல வருடங்களுக்கு முன்பு தன் தந்தையின் பாதுகாப்பில் இருந்து தப்பி ஓடிய ஒரு குற்றவாளியை அவர் பிடிக்க முயலும்போது, அவருக்கு விசித்திரமான விஷயங்கள் நடக்கின்றன.


மேலும் படிக்க | Netflix நேயர்கள் கவனத்திற்கு! 18 தமிழ் படங்களை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ