Netflix நேயர்கள் கவனத்திற்கு! 18 தமிழ் படங்களை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்!

நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் 18 தமிழ்ப் படங்களின் உரிமத்தை வைத்திருப்பதன் மூலம் அதன் தமிழ் மொழி உள்ளடக்கத்தை விரிவுபடுத்துகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 17, 2023, 06:00 PM IST
  • சமூகவலைதளப் பக்கங்களில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 18 தலைப்புகளை அறிவித்துள்ளது.
  • ரசிகர்கள் தங்கள் இல்லத்திரைகளில் நெட்ஃபிலிக்ஸ் வாயிலாக பார்த்து ரசிக்கலாம்.
  • நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் தமிழ் மொழி உள்ளடக்கத்தை விரிவுபடுத்துகிறது.
Netflix நேயர்கள் கவனத்திற்கு! 18 தமிழ் படங்களை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்! title=

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம்  2023-ம் ஆண்டில் தன்னிடமுள்ள உரிமம் உள்ள படங்களில் ஒரு பகுதியாக 18 படங்கள் குறித்தான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முடித்த பின்னர் ரசிகர்கள் இதனை தங்கள் இல்லத்திரைகளில் நெட்ஃபிலிக்ஸ் வாயிலாக பார்த்து ரசிக்கலாம்.  

தனது சமூகவலைதளப் பக்கங்களில் நெட்ஃபிலிக்ஸ் நிறுவனம் இந்த 18 தலைப்புகளை அறிவித்துள்ளது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நெட்ஃபிலிக்ஸில் வெளியான 'பீஸ்ட்', 'நித்தம் ஒரு வானம்', 'டாக்டர்' மற்றும் சமீபத்தில் வெளியான 'கட்டா குஸ்தி' ஆகிய படங்கள் உலகம் முழுவதும் ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நிலையில், அடுத்து என்னென்ன படங்கள் நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக உள்ளனர். 

தங்களுடைய லைன்-அப் படங்கள் குறித்து நெட்ஃபிலிக்ஸின் கண்டெண்ட் VP மோனிகா ஷெர்கில் பகிர்ந்து கொண்டதாவது, "எங்களுடைய  பார்வையாளர்கள் உள்ளூர் கதைகளில் இருந்து உலக படங்கள் வரை விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள் என்பதால் அவர்கள் விரும்புவதை தருவதற்கே நாங்கள் விருப்பப்படுகிறோம். 'பீஸ்ட்', 'நித்தம் ஒரு வானம்', 'டாக்டர்' மற்றும் 'கட்டா குஸ்தி' ஆகிய படங்கள் உலகம் முழுவதும் பார்வையாளர்களிடையே பேசுபொருளானது. அதனால், இப்போது எங்களிடம் லைன்-அப்பில் உள்ள படங்களும் அது போன்று வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பல ஜானர்களில் அமைந்துள்ள இந்தப் படங்களை தென்னிந்தியாவில் உள்ள பல திறமையான கலைஞர்கள் உருவாக்கி உள்ளனர். இந்தியாவைத் தாண்டி உலகின் ஒவ்வொரு மூலையிலும் இருக்கக்கூடிய அனைத்து பார்வையாளர்களுக்கும் படங்களைக் கொண்டு சேர்க்க வேண்டும் என திரைக்குப் பின்னால் டப்பிங், சப்டைட்டில் ஆகியவற்றிலும் கடின உழைப்பைக் கொடுத்துள்ளோம்" என்றார். 

மேலும் படிக்க | விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட லோகேஷ் கனகராஜ்!

படங்களின் பட்டியல்:

1. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன், 
டைட்டில் / புராஜெக்ட்: AK 62,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

2. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,
டைட்டில் / புராஜெக்ட்: சந்திரமுகி 2,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

3. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன், 
டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்ஷன் நம்பர் 20,
மொழி: தமிழ்

4. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,
டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்‌ஷன் நம்பர் 24,
மொழி: தமிழ்

5. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன், 
டைட்டில் / புராஜெக்ட்: புரொடக்‌ஷன் நம்பர் 18,
மொழி: தமிழ்

6. தயாரிப்பு நிறுவனம்: லைகா புரொடக்‌ஷன்,
டைட்டில் / புராஜெக்ட்: நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்,
மொழி: தமிழ்

7. தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: ஆர்யன், 
மொழி: தமிழ், தெலுங்கு

8. தயாரிப்பு நிறுவனம்: விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ்/ RT டீம் வொர்க்ஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: கட்டா குஸ்தி, 
மொழி: தமிழ், தெலுங்கு

9. தயாரிப்பு நிறுவனம்: பேஷன் ஸ்டுடியோஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: இறைவன், 
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

10. தயாரிப்பு நிறுவனம்: பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் LLP,
டைட்டில் / புராஜெக்ட்: இறுகப்பற்று, 
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

11. தயாரிப்பு நிறுவனம்: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ், 
டைட்டில் / புராஜெக்ட்: ஜப்பான், 
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

12. தயாரிப்பு நிறுவனம்: ஸ்டோன் பென்ச் ஃபிலிம்ஸ்
டைட்டில் / புராஜெக்ட்: ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

13. தயாரிப்பு நிறுவனம்: ரெட் ஜெயண்ட் மூவிஸ், 
டைட்டில் / புராஜெக்ட்: மாமன்னன், 
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

14. தயாரிப்பு நிறுவனம்: தி ரூட் / பேஷன் ஸ்டுடியோஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: ரிவால்வர் ரீட்டா,
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

15. தயாரிப்பு நிறுவனம்: YNOT ஸ்டுடியோஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: தலைகோதல்,
மொழி: தமிழ்

16. தயாரிப்பு நிறுவனம்: ஸ்டுடியோ க்ரீன், 
டைட்டில் / புராஜெக்ட்: தங்கலான், 
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி

17. தயாரிப்பு நிறுவனம்: சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ்/ ஸ்ரீகரா ஸ்டுடியோஸ்/ ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் 
டைட்டில் / புராஜெக்ட்: வாத்தி, 
மொழி: தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்

18. தயாரிப்பு நிறுவனம்: சூப்பர் குட் ஃபிலிம்ஸ்,
டைட்டில் / புராஜெக்ட்: வரலாறு முக்கியம், 
மொழி: தமிழ், இந்தி

நெட்ஃபிலிக்ஸ் குறித்து:

உலகின் முன்னணி ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்ஃபிலிக்ஸ் 223 மில்லியன் பெய்ட் மெம்பர்ஷிப்ஸூடன் 190 நாடுகளில் டிவி சீரிஸ், டாக்குமெண்ட்ரிஸ், சிறப்புப் படங்கள் மற்றும் மொபைல் கேம்ஸூடன் பல ஜானர்கள் மற்றும் மொழிகளில் தனது சேவையைக் கொடுத்து வருகிறது. சந்தாதாரர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ற வகையில் எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் நிறுத்தலாம், விளையாடலாம், மீண்டும் பார்க்கலாம். எப்போது வேண்டுமானாலும் தங்கள் திட்டங்களை மாற்றிக் கொள்ளலாம்.

மேலும் படிக்க | வாரிசு படத்தில் குஷ்பூவின் காட்சிகள் நீக்கப்பட்டதற்கு இதுதான் உண்மையான காரணமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News