Connect Movie OTT Release Date: நயன்தாராவின் கனெக்ட்...OTT ரிலீஸ் எப்போ?

Connect Movie OTT Release Date: விரைவில் ஓடிடி ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. நயன்தாராவை வைத்து 'மாயா' படத்தை இயக்கிய, அஸ்வின் சரவணன் இந்த படத்தை மீணடும் நயன்தாராவை வைத்து இயக்கியுள்ளார். 

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jan 17, 2023, 01:46 PM IST
  • 'கனெக்ட்' படத்தின் ஓடிடி.
  • ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்.
  • அஸ்வின் சரவணன் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
Connect Movie OTT Release Date: நயன்தாராவின் கனெக்ட்...OTT ரிலீஸ் எப்போ? title=

நயன்தாராவின் சமீபத்திய படம் கனெக்ட் விரைவில் OTT தளத்தில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தின் டிஜிட்டல் உரிமையை OTT இயங்குதளமான நெட்பிலிக்ஸ் நிறுவனம் கைபற்றியுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்போது வரை படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த எந்த அறிவிப்பும் வெளியிடப்பட வில்லை என்பதே உண்மை. இதற்கிடையில் கடந்த டிசம்பர் 22ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான கனெக்ட் படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. 

கனெக்ட் படத்தின் OTT வெளியீடு (Connect Movie OTT Release Date)

லாக்டவுனின் போது ஓஜோ போர்டால் ஆன்மாவை அழைக்கும் ஒரு பெண் மற்றும் அதைத் தொடர்ந்து நடக்கும் நிகழ்வுகள்தான் கனெக்ட் படத்தின் கதையாகும். இந்த படத்தை அஷ்வின் சரவணன் இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ஆகியோர் முக்கியமான பாத்திரங்களில் நடித்திருந்தனர். திரையரங்கில் மாஸாக ஓடிக்கொண்டு இருக்கும் கனெக்ட் படம் தற்போது OTT வெளியீட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

மேலும் படிக்க | Netflix நேயர்கள் கவனத்திற்கு! 18 தமிழ் படங்களை வாங்கிய நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்!

இந்தப் படம் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் ஆகியவற்றின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. படத்தின் வசனத்தை படத்தின் இயக்குனர் அஸ்வின் சரவணன் எழுதியுள்ளார். மாயா, கேம் ஓவர் படங்களுக்குப் பிறகு அஸ்வின் சரவணன் இயக்கி இருக்கும் படம் கனெக்ட்.

ஒளிப்பதிவு - மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி
இசை - பிருத்வி சந்திரசேகர்
எடிட்டர் - ரிச்சர்ட் கெவின்
கலை இயக்கம் - சிவசங்கர் மற்றும் ஸ்ரீராமன்
ஒலி வடிவமைப்பு - சச்சின் சுதாகரன், ஹரிஹரன் எம்
ஒலி கலவை - ராஜகிருஷ்ணன்
சண்டைக்காட்சி - "ரியல்" சதீஷ்
ஆடை வடிவமைப்பாளர் - அனு வர்தன் & கவிதா ஜே
ஒப்பனை - சிதம்பரம்
செயற்கை நிபுணர் - சினேகா மனோஜ், அஸ்தா பிசானி
நடிப்பு - வர்ஷா வரதராஜன்
ஸ்டில்ஸ் - கோமளம் ரஞ்சித்
விளம்பர வடிவமைப்பாளர் - கபிலன்
பிஆர்ஓ - சுரேஷ் சந்திரா - ரேகா டி ஒன்
நிர்வாகத் தயாரிப்பாளர் - ரா. சி.பி.மாரப்பன்
இணைத் தயாரிப்பாளர்கள் - குபேந்திரன் வி.கே, மெயில்வாகனன் கே.எஸ்.

மேலும் படிக்க | 2023இல் வெளியான மற்றும் வெளியாகவிருக்கும் தமிழ் திரைப்படங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News