நயன் தாராவின் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் நிழல். மலையாளத்தில் நிழல் என்ற பெயரில் வெளியான இந்த திரைப்படம் தமிழில் மாய நிழல் என்ற பெயரில் வெளியாகிறது. இந்த தமிழ் திரைப்படத்தின் டிரெய்லர் விஜயதசமியன்று சமூக ஊடகங்களில் வெளியாகி அவரின் கவனத்தையும் பெற்று வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நடிகை நயன்தாரா நடிகை நயன்தாரா 10 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் வெளுத்து வாங்குவதால் லேடி சூப்பர்ஸ்டார் என்று பெயர் பெற்ற நயன்தாராவின் நிழல் தற்போது மாயநிழலாக தமிழில் முத்திரை பதிக்கவிருக்கிறது. 


முத்திரை பதிப்பதற்கு முன் அதற்கு கட்டியம் கூறுகிறார் பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு. அவர், தனது டிவிட்டர் பக்கத்தில் மாய நிழல் திரைப்படத்தின் டிரெய்லரை வெளியிட்டுள்ளார். அது சமூக ஊடகங்களில் வைரலாகிறது.



லேடி சூப்பர் ஸ்டார், சூப்பர் ஸ்டாருடன் நடித்திருக்கும் அண்ணாத்த திரைப்படமும், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட சில படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. அதுமட்டுமல்ல, பாலிவுட்டில் ஷாருக்கானுடன் நயன் இணைந்துள்ள லயன் படமும் வெளிவரவிருக்கிறது. 


Also Read | ரசிகர்களுக்கு திரைப்பட விருந்தாக அமையும் இந்த தீபாவளி!


மலையாள திரைப்படமான நிழலில், நயனுக்கு ஜோடியாக குஞ்சாக்கோ போபன் நடித்திருந்தார். குழந்தையை மையமாக கொண்டு வெளியான இந்தத் த்ரில்லர் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நயன்தாராவிற்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. விஜயதசமியையொட்டி மாயநிழலின் ட்ரெயிலரை பிரபல டைரக்டர் வெங்கட் பிரபு வெளியிட்டார்.  



கேரளாவைச் சேர்ந்த லேடி சூப்பர் ஸ்டார் நயன், 2003ஆம் ஆண்டில் மலையாள திரைப்படம் மூலமாக திரையுலகில் அடியெடுத்து வைத்தார். அந்த அடியை தமிழகத்தில் எடுத்து வைத்து, தமிழக ரசிகர்களின் மனதில் தனது தடத்தை பதித்துவிட்டார் நயன்தாரா.  


மலையாளியாக இருந்தாலும் நயன்தாரா, கர்நாடகாவில் உள்ள பெங்களூரில் பிறந்தவர். நயனின் தந்தை இந்திய விமான படையில் பணியாற்றியதால் பல்வேறு மாநிலங்களிலும் வளர்ந்த நயன்தாரா, தமிழ், தெலுங்கு, மலையாளம் இந்தி என பல மொழிகளிலும் நடித்து தனக்கென இடம் பிடித்துள்ளார்.


Read Also | தெலுங்கு பிளாக் பஸ்டர் படத்தின் ரீமேக்கில் நடிக்கும் சந்தானம்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR