தேசிய விருது வென்ற பழங்குடி பெண்! யார் இந்த நஞ்சியம்மா?
அய்யப்பனும் கோஷியும் படத்தில் இடம் பெற்ற களக்காத்த சந்தன மரம் பாடல் பாடிய நஞ்சம்மாவிற்கு தேசிய விருது கிடைத்துள்ளது.
ஒரு சிறிய ஈகோ மோதல் எந்த அளவிற்கு மிகப்பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்பது தான் அய்யப்பனும் கோஷியும் படத்தின் கதை. இந்தக்கதையை அட்டப்பாடி பழங்குடியின வாழ்வியலோடு, அவர்களது கலாச்சாரம்,பண்பாட்டின் ஊடாக அழகாக திரைக்கதையை உருவாக்கியிருப்பார் இயக்குநர் சச்சி. இந்தப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் , பிஜிமேனன் யாருன்னு அம்மாவுக்கு தெரியுமா? என ஒரு பழங்குடியின பெண்ணிடம் கேட்பார், அவர் தெரியாது என சிரித்து பதில் அளிப்பார். அந்த தமிழ் பழங்குடியின பெண்தான் நஞ்சியம்மா!
மேலும் படிக்க | தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படம் எப்படி இருக்கு? The Gray Man விமர்சனம்!
அவர், பாடும் நாட்டர் பாடலான 'களக்காத்த சந்தன மரம் வெகுவாகப் பூத்திருக்கு..பூப்பறிக்க போகலாமோ, விமானத்த பார்க்கலாமோ, லாலேலே லாலா லே லாலே லே லா லே பலரும் முணுமுணுக்கும் பாடல்கள் வரிசையில் ஒன்றாகிபோனது. இப்பாடல் குறித்து நஞ்சியம்மா பேசும்போது, எப்போதாவது சந்தனமரக் காட்டின் மேலே வானத்தில் பறந்து மறையும் விமானத்தைக் காட்டி குழந்தைக்குச் சோறூட்ட தான் இட்டுக்கட்டிப் பாடிய பாடல். இதிலிருக்கும் மெட்டு எனது முன்னோர்களுடையது என்றார். தமிழகமும் கேரளாவும் மேற்கு மலைத்தொடர்ச்சியில் இணையும் இடத்தில் அமைந்துள்ள பள்ளத்தாக்குதான் அட்டப்பாடி. நஞ்சியம்மா தமிழகத்தில் கோபனாரியில் பிறந்து, கேரளா, அட்டப்பாடி நாக்குபத்தி கிராமத்திற்கு வாக்குபட்டுச் சென்றார். அந்த பகுதியில் இருக்கும், ஆசாத் கலா சமிதி என்கிற நடன இசைக்குழுவில் உறுப்பினரானவர், கேரளா மற்றும் பிற மாநிலங்களில் நடக்கும் கச்சேரிகளிலும் நஞ்சியம்மா, பங்கேற்று பாடியுள்ளார்.
அய்யப்பனும் கோஷியும் படம் அட்டப்பாடியில் உருவாக்கப்பட்ட போதே, இயக்குநர் சச்சி, அந்தப் பகுதியைச் சேர்ந்த யாரையேனும் ஒருவரை பாடவைக்க முடிவு செய்தார். அப்படித்தான்நஞ்சியம்மாவின் குரலில் அவர் பாடக்கேட்கவும் அந்த படத்துக்காக ஓகே செய்யப்பட்டார். பாடல் பதிவு சென்னையில்தான் நடந்தது. அப்போது காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு நஞ்சம்மா, பாடியபோது ரிதம் சரியாக வரவில்லை. இதனால் பாட வைத்து, பின் டெம்போவை இசைக்கு தகுந்தாற்போல், மாற்றிக்கொண்டதாக இசையமைப்பாளர் ஜேக் ஒரு நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். நாட்டின் 68வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன. இதில் 'அய்யப்பனும்,கோஷியும்' என்ற படத்திற்காக சிறந்த இயக்குநர் விருது மறைந்த இயக்குநர் சச்சிக்கும், சிறந்த துணை நடிகருக்கான விருதை பிஜு மேனன் பெற இருக்கின்றனர். மேலும் சிறந்த பாடகருக்கான விருதை நஞ்சம்மாவும் பெற இருக்கிறார்.
இவ்விருது குறித்து நஞ்சியம்மா கூறும் போது, இரண்டாவது விருது வாங்கினது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எல்லா மக்களுக்குள்ளும் நான் இருக்கிறேன். எனக்கு விருது கிடைக்க காரணமாக அனைத்து மக்களுக்கும், அரசுக்கும் நன்றி. நான் யாருன்னு தெரியாதப்ப, கண்டிப்பாக நீ எல்லோருக்கும், தெரிவேன்னு,சொன்ன இயக்குநர் சச்சி சரோட வாக்கு நடந்திருக்கு. அவர் எனக்கு கடவுள். இந்த மக்களிடம் என்னை கொண்டு சேர்த்தவர், அவர் இருந்து பார்க்க வேண்டியது, மறைந்துவிட்டார். அவர் என்னுள்ளே இருக்கிறார். இந்த விருதை வைத்து, அவராகவே பார்ப்பேன் என்றார். இருந்தாலும், இறந்தாலும் சச்சி சாரை நான் பார்ப்பது போல நீங்களும் என்னை பார்ப்பீர்கள். உங்கள் மனதில் நான் இருக்கிறேன். என் மனதில் நீங்கள் இருக்கிறீர்கள், அனைவரும் நன்றாக இருக்க கடவுள் அருள் கிடைக்கட்டும் என்றார்.
மேலும் படிக்க | தடைகள், சிக்கல்கள் : ‘சூரரைப் போற்று’ கடந்து வந்த பாதை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ