‘லியோ’ பட நாயகி த்ரிஷா, தற்போது விஜய்யுடன் பிசியாக நடித்து வருகிறார். அடுத்து, அஜித்துடன் ‘விடா முயற்சி’ படத்திலும் இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், இவர் அடுத்து பாலிவுட் நட்சத்திரங்களுடன் நடித்த ஒரு வீடியோ வெளியாகியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரன்வீர் சிங் வெளியிட்ட வீடியோ…


பாலிவுட்டில் பிரபல நடிகராக விளங்கும் நடிகர் ரன்வீர் சிங், ஒரு வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், நடிகை தீபிகா படுகோன், ராம் சரண் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். தீபிகா படுகோன், “என் கணவரை காணவில்லை” என காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அடுத்தடுத்த காண்பிக்கப்படும் காட்சிகளில் நடிகை த்ரிஷா டென்ஷனான முகத்துடன் நிற்பது போலவும், ரன்வீர் சிங் ‘டார்கெட்டை கண்டுபிடித்து விட்டேன்..’ என கூறிக்கொண்டு யாரையோ பின்தொடர்வது போலவும் சில காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஆர்,ஆர்.ஆர் பட ஹீரோ ராம் சரண் மார்கெட்டிற்குள் ஓடுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றுள்ளன. முன்னறிவிப்பு ஏதுமின்றி இப்படி திடீரென்று பல ஸ்டார்ஸ்கள் இருக்கும் வீடியோவை ரன்வீர் சிங் வெளியிட்டுள்ளதால் ரசிகர்கள் ஒன்றும் புரியாமல் உள்ளனர். இந்த வீடியோ, “ஷோ மீ தி சீக்ரெட்” என்ற பெயரில் வெளியாகியுள்ளது. 


மேலும் படிக்க | சிவகார்த்திகேயனை ரஜினியுடன் ஒப்பிட்ட மிஷ்கின்..! எந்த விஷயத்தில் தெரியுமா..?


விளம்பரமா..?


ரன்வீர் சிங் இந்த வீடியோவை வெளியிட்டதை தொடர்ந்து ரசிகர்கள் இதற்கு தொடர்ந்து கமெண்ட் செய்த வண்ணம் உள்ளனர். ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய நடிகர்கள் இணையும் ஒரு படமாக இருந்தால் முன்னரே ஏதாவது தகவல் வெளியாகியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஏதாவது புகைப்படமாவது எங்காவது வெளியாகியிருக்கும். ஆனால், அப்படி எதுவுமே இதில் வெளியாகவில்லை. திடீரென வீடியோவை மட்டும் வெளியிட்டிருக்கின்றனர். சில பெரிய பிராண்டுகள் தங்களது பொருட்களை அறிமுகப்படுத்துவதற்கு முன்னர் இது போன்ற விளம்பரங்களை நடிகர்களை வைத்து எடுப்பதுண்டு. அதே போல இதுவும் ஒரு விளம்பரமாக இருந்து விடக்கூடாது என ரசிகர்கள் கமெண்டுகளில் கருத்து தெரிவித்துள்ளனர். 



தொடர் படங்களில் நடிக்கும் த்ரிஷா…


நடிகை த்ரிஷா 2023ஆம் ஆண்டின் வெற்றிகரமான நாயகிகளுள் முதன்மையானவராக இருக்கிறார். இவர், பொண்ணியின் செல்வன் 2 படத்தின் ப்ரமோஷன் பணிகளில் இருந்த போதே இவர் லியோ படத்தில் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகிவிட்டது. தற்போது அவர் லியாே படத்தில் நடித்து வரும் நிலையில் இவரது அடுத்தடுத்த படங்கள் குறித்த தகவல்களும் வெளியாகியுள்ளது. விடா முயற்சி, சிரஞ்சீவியுடன் ஒரு படம் என பிசியான கதாநாயகியாக வலம் வருகிறார் த்ரிஷா. 


பாலிவுட்டில் ஒரு ரவுண்டு வருவாரா..?


நடிகை த்ரிஷா, தான் திரையுலகிற்கு வந்த புதிதில் இருந்து இன்று வரை தென்னிந்திய படங்களில் மட்டுமே அதிகம் தலைக்காட்டி வருகிறார். இவரைத்தேடி பாலிவுட் பட வாய்ப்புகள் வந்தாலும் அதை இவர் தட்டிக்கழிப்பதாக கூறப்படுகிறது. பொண்ணியில் செல்வன் திரைப்படம் வெளியாகி பயங்கர ஹிட் அடித்த நிலையில் இவருக்கு அனைத்து திரையுலகிலும் மவுசு கூடியுள்ளது. பல தயாரிப்பாளர்களின் ஃபேவரட் ஹீரோயினாக த்ரிஷா இருப்பதால் அனைவரும் பட வாய்ப்பிற்காக லைன் கட்டி நிற்கின்றனர். ரன்வீர் சிங், ராம் சரண் ஆகியோருடன் இவர் கைக்கோர்த்திருக்கும் இந்த வீடியோ ஒரு படம் அல்லது தொடருக்கான அறிவிப்பு என்பது உறுதியாகிவிட்டால், இவர் பாலிவுட்டிற்கும் செல்வது உறுதி என்கின்றனர் சினிமா ரசிகர்கள். 


மேலும் படிக்க | ‘வாடிவாசல்’ படத்திற்காக லண்டன் சென்ற வெற்றிமாறன்..! படப்பிடிப்பு தொடங்குவது எப்போது..?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ