பிரபல யூட்டுபரும் தமிழ் சினிமாவில் புதிதாக வெளி வர இருக்கும் மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகன் டிடிஎப் வாசன் வந்த கார் சென்னையில் திடீரென விபத்துள்ளானது.  டிடிஎஃப் வாசன் சமூகவலைத்தளத்தில் பைக் ரேஸ் மூலம் பிரபலமானவர். இவருக்கு மிக பெரிய அளவில் 2k கிட்ஸ் புள்ளிங்கோக்களின் ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக கல்லூரி பருவமுடைய பல இளைஞர்கள் இவர் மீது வெறியாக இருப்பார்கள். இவரை போல பைக் ரேஸ், பைக் ரைட் விரும்பிகள் பலர் இவரை பின்தொடர்ந்து வருகிறார்கள். அவ்வப்போது இவர் பல சர்ச்சைகளில் சிக்கி காவல் நிலையத்திற்கு சென்று கேஸ்க்கு மேல் கேஸ்  வாங்கி உலா வரும் ஒருவராக இருக்கிறார்.  இந்த நிலையில், சென்னை அமைந்தகரை அருகே டிடிஎஃப் வாசன் சென்ற கார் விபத்தில் சிக்கியுள்ளது. பின், அவர் அந்த காரில் இருந்து இறங்கி ஆட்டோவில் ஏறி சென்றுள்ளார். பெரிய அளவு ஏதும் சேதம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | எம்.ஜி.ஆர் வழியில் செல்லும் விஜய்..? சினிமாவை விட்டு விலகி சட்டமன்ற தேர்தலில் போட்டியா..?


டிடிஎஃப் வாசன் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் முதல் போஸ்டர் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது. இதனால், மஞ்சள் வீரன் படப்பிடிப்புக்காக சென்னையில் முகாமிட்டுள்ளார்கள் என்றும் கூறப்படுகிறது.  இதை தொடர்ந்து யூட்டுபர் டி.டி.எப் வாசன்,சென்னையில் உள்ள நெல்சன் மாணிக்கம் சாலையில் சிவப்பு நிற காரின் இன்று காலையில் தனது நண்பர்களுடன் வந்து கொண்டிருந்தார், அப்போது முன்னாடி சென்ற இரு சக்கர வாகனத்தின் மீது திடீரென அவருடைய கார் மோதியுள்ளது.



இதில் இரு சக்கரவாகனம் ஓட்டி வந்த நபர் கீழே விழுந்துள்ளார். அதில் அந்த நபர் காயமடைந்துள்ளார்.  இது குறித்து அண்ணாநகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.  மேலும் சிறிது நாளுக்கு முன்பு கூட யூட்டுபர் இர்பானின் சொகுசு காரும் விபத்துக்குள்ளாகி ஒரு மூதாட்டி உயிரிழந்துள்ளார் தொடர்ந்து யூட்டுப்பில் வருமானால் அதிகமாக வருவதால் இது போல யூட்டுபர்ஸ் விபத்தை ஏற்படுத்தி விட்டு தனக்கு தெரிந்த அரசியல் பிரமுகர்களை வைத்து தப்பித்து கொள்வதே வாடிக்கையாக உள்ளது.


மேலும் படிக்க | இந்தியன் 2 பட ஒளிப்பதிவாளர் வெளியிட்ட புகைப்படம்.. ரசிகர்கள் உற்சாகம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ