தமிழ் சினிமாவுக்கு Split personality என்றால் என்னவென்று அறிமுகப்படுத்தியது அந்நியன் திரைப்படம். அதற்கு முன் ஹாலிவுட்டில் இதே கான்சப்டில் நிறைய படங்கள் வெளியாகியிருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகியிருக்கக் கூடிய திரைப்படம் துக்ளக் தர்பார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

Split Personality என்றவுடன் அந்நியன் போல சீரியசான திரைப்படம் என்று நினைத்துவிட வேண்டாம். இது காமெடி கலந்த அரசியல் திரைப்படம். முக்கிய கதாபாத்திரங்களான விஜய் சேதுபதி, பார்த்திபன் இருவரும் நடிப்பில் கலக்கியிருக்கிறார்கள். கூடவே வரும் கருணாகரன் எப்போதும் போல காமெடியிலும் கண்டிப்பிலும் அசத்தியிருக்கிறார். இந்தியில் ராஷி கண்ணாவை பார்த்துவிட்டு தமிழுக்கு எப்போ வருவீங்க? எப்போ வருவீங்கனு கேட்டவர்கள் அவர் நடிக்கும் அடுத்த படத்தைதான் பார்க்க வேண்டும். அந்த அளவுக்கு தேவையில்லாத கதாபாத்திரம். ஒரு ஹீரோயின் நிச்சயம் படத்தில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் எப்போ ஒழியுமோ!


ALSO READ : அண்ணாத்த படத்தின் மாஸ் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!


அழுத்தமான தங்கை கதாபாத்திரத்தில் மஞ்சிமா மோகன். அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்துவிட்டு இப்போது ஏன் தங்கை கதாபாத்திரம் என்று நினைக்க வேண்டாம். படத்தில் மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் அது. வசனங்கள் குறைவு என்றாலும் கண்கள் அழகாக நடித்திருக்கின்றன.


அரசியலில் அட்டகாசம் செய்யும் ஒரு தலைவர் (பார்த்திபன்), அவருக்கு அவரை விட அதிக அட்டகாசம் செய்யும் தொண்டன்(விஜய் சேதுபதி). இருவரும் சேர்ந்து மக்களை ஏமாற்றி ஊரை உலையில் போடுகிறார்கள். ஆனால் அதையெல்லாம் தடுக்க தொண்டனுக்குள்ளேயே இருக்கும் நல்ல விஜய் சேதுபதி வெளியே வருகிறார். அவர் எப்படி பார்த்திபனுக்கு தெரியாமல் மக்கள் நல்லது செய்கிறார் என்பதுதான் கதை. இதை மிக மிக ஜாலியாக சொல்லியிருக்கிறார் இயக்குநர். ஆக இப்படத்தில் ஹீரோவும் விஜய் சேதுபதிதான் வில்லனும் அவர்தான்.


துக்ளக் தர்பார் படத்தின் டீசர் வெளிவந்தபோது நாம் தமிழர் கட்சியையும் அதன் ஒருங்கிணைப்பாளர் சீமானையும் கேலி செய்வதாக விமர்சனங்கள் எழுந்தன. அக்கட்சியினர் கடுமையான எதிர்ப்புகளையும் பதிவு செய்தனர். ஆனால் இப்படத்தில் அப்படியான காட்சிகள் எதுவுமே இல்லை என்பது படத்தை பார்த்த பின்னர்தான் தெரிகிறது. டீசரை மட்டுமே பார்த்துவிட்டு எதிர்ப்பு தெரிவிக்கும் கலாசாரம் சமீப காலங்களில் அதிகமாகியிருக்கிறது. இது அவர்களது கட்சியை வளர்க்க பயன்பட்டாலும் திரைத்துறையை அழிக்கும். ஆனாலும் படக்குழுவினர் பார்த்திபனின் ’ராசிமான்’ என்ற பெயரை ’ராயப்பன்’ என்று மாற்றி நாம் தமிழர் கட்சியினரை திருப்திப்படுத்தியிருக்கிறார்கள்.


துக்ளக் தர்பார் 10.09.21 மதியம் 12.30 மணிக்கு சன் டிவியில் நேரடி வெளியீடும் அதே நாளில் நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் OTT வெளியீடும் செய்யப்படுகிறது. குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக்கூடிய காமெடி என்டர்டெயினர்.


ALSO READ : இயக்குநர் ஹரி - அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் "யானை" திரைப்பட First Look வெளியீடு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR