இயக்குநர் ஹரி - அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் "யானை" திரைப்பட First Look வெளியீடு

இயக்குநர் ஹரி - அருண் விஜய்  கூட்டணியில் உருவாகும் "யானை"  திரைப்பட  பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது

Written by - ZEE Bureau | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 9, 2021, 06:59 PM IST
இயக்குநர் ஹரி - அருண் விஜய்  கூட்டணியில் உருவாகும் "யானை"  திரைப்பட First Look வெளியீடு

சென்னை: இயக்குநர் ஹரி - அருண் விஜய்  கூட்டணியில் உருவாகும் "யானை"  திரைப்பட  பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது. அருண்விஜய் நடிக்கும் 33வது படம் இது.

விஜயசேதுபதி, கீர்த்தி சுரேஷ், ஆர்யா, ஆதி, விஜய் ஆண்டனி, டோவினோ தாமஸ், அனுராக் காஷ்யப்,  விஷ்ணு விஷால், சாந்தனு, அதர்வா, விக்ரம் பிரபு, சிபிராஜ், பா.ரஞ்சித், விக்னேஷ் சிவன், சீனு ராமசாமி, பிரசன்னா, அசோக் செல்வன், கிருஷ்ணா, ஆர்.பார்திபன், சேரன், கவுதம் வாசுதேவ் மேனன், வெங்கட்பிரபு, அறிவழகன், சாம்.சி.எஸ், நவீன், வரலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கசண்ட்ரே, நிக்கி கல்ரானி, மஹிமா நம்பியார், வேதிகா, கார்த்திக் நரேன், அஜய் ஞானமுத்து என 33 சினிமா பிரபலங்கள் சேர்ந்து இன்று வெளியிட்டனர்.  

தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி. தமிழின் முன்னணி நட்சத்திரங்களை வைத்து மிகப்பெரிய வெற்றிப்படங்களை தந்த ஹரி, தற்போது தொடர் வெற்றிகளால் முன்னணி நாயகனாக மிளிர்ந்து வரும் நடிகர் நடிகர் அருண் விஜய் உடன் இணைந்து ஒரு  படத்தை பெரிய பட்ஜெட்டில் உருவாக்கி வருகிறார்கள். 

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் மெகா வெற்றி பெற்ற ‘சிங்கம்’திரைப்படத்திற்கு பிறகு, தற்போது ‘யானை’இன்னும் பிரம்மாண்ட வெற்றி பெறும் என்று எதிர்ப்பார்ப்பு நிலவுகிரது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் உற்சாக வரவேற்பை பெற்றுள்ளது.

அருண் விஜய்க்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். சமுத்திரகனி, ராதிகா, யோகிபாபு, KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். 
கிராமத்து பின்னணியில் உருவாகும் யானை திரைப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடியில், பழனி, ராமேஸ்வரம் முதலான பகுதிகளில் கடந்த மாதம் தொடங்கியது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது.  

yannai

இயக்குநர் ஹரியின் தனித்தன்மை வாய்ந்த திரைக்கதையில், கிராமமும் நகரமும் கலந்த பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் ஆக்சன் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகி வருகிறது.

படத்தின் தொழில் நுட்ப கலைஞர்கள் விபரம்:
இசை: GV. பிரகாஷ்குமார்
ஒளிப்பதிவு: கோபிநாத்
எடிட்டிங்: ஆண்டனி
ஸ்டண்ட்: அனல் அரசு
கலை: மைக்கேல்
மக்கள் தொடர்பு : ஜான்சன்
இணை தயாரிப்பு: G.அருண்குமார்
தயாரிப்பு: டிரம்ஸ்டிக்ஸ்    புரொடக்ஷன்ஸ் Drumstick Productions எஸ்.சக்திவேல் .

Also Read | அண்ணாத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News