விக்ரம் படத்தால் வந்த நிலைமை... உண்மையை கூறிய உதயநிதி
விக்ரம் படத்தின் வசூல் நிலவரம் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்த படம் விக்ரம். கமலுடன் விஜய் சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருந்த இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். கடந்த ஜூன் 3ஆம் தேதி படம் வெளியாகி ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது.
இதுவரை படமானது 300 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. இதனால் உற்சாகமடைந்த கமல் ஹாசன் இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார், லோகேஷின் உதவி இயக்குநர்களுக்கு அப்பாச்சி பைக், சிறப்புத் தோற்றத்தில் நடித்த சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஆகியவைகளை பரிசளித்து அசத்தினார்.
இந்நிலையில் விக்ரம் படத்தின் சக்சஸ் மீட் நேற்று நடைபெற்றது. இதில் கமல், லோகேஷ், உதயநிதி ஸ்டாலின், அனிருத் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “டான் படத்தின் வெற்றி விழாவில் சில உண்மைகளை நான் கூறினேன். அதுபோன்று இங்கும் சில உண்மைகளை கூறுகிறேன். விக்ரம் படத்தை கமல் சார் முதலில் என்னிடம்தான் போட்டு காண்பித்தார். இடைவேளை வந்ததும் மிரண்டுவிட்டேன்.
ஏனென்றால் அப்படி ஒரு இடைவேளை காட்சியை தமிழ் சினிமாவில் நான் பார்த்ததில்லை. இந்தப் படத்தின் மூலம் தமிழ் விநியோகஸ்தரான எனக்கு மட்டும் ரூ.75 கோடி பங்கு கிடைத்திருக்கிறது. இதுவரை எந்த தமிழ் சினிமாவும் இப்படி வசூல் செய்தது இல்லை. சிறியவர்கள் முதல் பெரியவர்கள்வரை திரையரங்குகளுக்கு மீண்டும் மீண்டும் வந்து படத்தை பார்க்கின்றனர்.
கமல் பட வாய்ப்பு கிடைத்தது என்பதற்காக ஏதோ ஒரு படத்தை எடுக்காமல் இந்த மாதிரி ஒரு வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு நன்றி” என்றார். இந்த விழா முடிந்ததும் கமல் ஹாசன் ஏற்பாட்டின்பேரில் அனைவருக்கும் அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
மேலும் படிக்க | கவர்ச்சி படத்துக்கு 2000, வீடியோ காலுக்கு 30,000 - கட்டணம் நிர்ணயித்த நடிகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR