தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் மாதவன். இவர் திரை உலகின் சாக்லேட் பாய் என்று அனைவராலும் அழைக்கப்படுகிறார். இவர் தமிழ் படங்கள் மட்டுமின்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் சினிமாவிலும் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார். சமீபகாலமாக திரைப்படங்கள் மட்டுமின்றி இவர் வெப் சீரிஸ்களிலும் மாஸ் காட்டி வருகிறார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 1999 ஆம் ஆண்டு நடிகர் மாதவன் (Madhavan) தனது மனைவி சரிதாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு வேதாந்த் (Vedaant) என்ற மகன் உள்ளார். இவருக்கு வயது 16. தற்போது வேதாந்த் மாதவன் விளையாட்டுத்துறையில் ஆர்வமாக உள்ளார். அதன்படி நீச்சல் போட்டிகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார்.


ALSO READ | 'ஈரம்' பட இயக்குனருடன் கூட்டணி சேரும் நடிகர் மாதவன்!


பெங்களூரில் நடைபெற்ற தேசிய ஜூனியர் நீச்சல் போட்டியில் பல பதக்கங்களை வென்றுள்ளார். அதேபோல், கடந்த மார்ச் மாதம் லத்வியன் ஓபன் நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார் வேதாந்த்.



அந்த நிலையில் தற்போது இவர் அடுத்ததாக வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தயாராகி வருகிறார். இதற்காக பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். ஆனால் தற்போது கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவில் உள்ள பெரிய நீச்சல் குளங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனால், வேதாந்த் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராவதில் சிக்கல் ஏற்பட்டது.


இந்த நிலையில் மகனின் நீச்சல் பயிற்சிக்காக நடிகர் மாதவன் தனது குடும்பத்துடன் துபாய்க்கு குடி பெயர்ந்துள்ளார். ஊடகம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் இதுகுறித்து தெரிவித்துள்ள மாதவன், தங்களின் மகன், உலகம் முழுவதும் நடைபெறும் பல நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று தங்களுக்கு பெருமை சேர்த்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் தனது மகன் ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதால் அவருக்கு தேவையான உதவிகளை நானும் எனது மனைவியும் துபாயில் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


ALSO READ | ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் விஷால்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR