'ஈரம்' பட இயக்குனருடன் கூட்டணி சேரும் நடிகர் மாதவன்!

நடிகர் மாதவன் இயக்குனர் அறிவழகன் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 17, 2021, 06:07 PM IST
'ஈரம்' பட இயக்குனருடன் கூட்டணி சேரும் நடிகர் மாதவன்! title=

2000-ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் வெளியான 'அலைபாயுதே' படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான மாதவனுக்கு என்றே இன்றளவும் தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.  பல வெற்றி படங்களில் நடித்த இவர் தற்போது 'ஈரம்', 'குற்றம் 23' போன்ற வெற்றி படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் இயக்கும் புதிய படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ALSO READ | குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கும் தேதி அறிவிப்பு!

அறிவழகன் - மாதவன் கூட்டணியில் உருவாகும் இந்த புதிய படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.  இந்த திரைப்படம் குறித்து ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

arivu

மாதவன் தற்போது "ராகெட்ரி: நம்பி விளைவு" என்கிற படத்தில் நடித்து வருகிறார், இந்த படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது.  அதனை தவிர இரண்டு ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் இயக்குனர் அறிவழகன், நடிகர் அருண் விஜய்யை வைத்து இயக்கிய "குற்றம் 23" படத்தை தொடர்ந்து தற்போது அருண் விஜய்யை வைத்து 'பார்டர்' என்கிற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையும் விஷால்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News