கோலிவுட் நகைச்சுவை நடிகர்களில் வடிவேலுவுக்கு என்று தனி பாணி உண்டு. மற்றவர்களை கிண்டல் செய்பவர்கள் மத்தியில் வடிவேலு தன்னை தானே கிண்டல் செய்து ரசிகர்களை சிரிக்க வைப்பவர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆனால், கடந்த சில வருடங்களாக அவர் நடிக்காமல் இருந்தார். இருப்பினும் காமெடி சேனல்களில் இருந்து மீம்ஸ்வரை வடிவேலுவே ஹீரோவாக திகழ்ந்தார். இந்தச் சூழலில், வடிவேலு தற்பபோது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ், மாமனிதன் உள்ளிட்ட படங்களில் நடித்துவருகிறார். 



அவரது வருகை நகைச்சுவைக்கு பெரும் புத்துணர்ச்சியை கொடுக்கும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் நடிகர் பிரபுதேவா வடிவேலுவை சமீபத்தில் சந்தித்தார்.


மேலும் படிக்க | நெல்சன் வேண்டுமா வேண்டாமா... ரஜினியை முடிவெடுக்க சொன்ன சன் பிக்சர்ஸ்?


அப்போது மனதை திருடிவிட்டாய் திரைப்படத்தில் ஸ்டீவ் வாக் கதாபாத்திரத்தில் நடித்து தான் பாடிய சிங் இன் தி ரெயின் என்ற பாடலை பாடினார். அதனை பிரபுதேவா தனது ட்விட்டர் பக்கத்தில் ‘நட்பு’ என குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.


 



கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான மனதை திருடிவிட்டாய் படத்தில் வடிவேலு நடித்திருந்த கதாபாத்திரம் இன்றுவரை ரசிக்கப்படுகிறது. குறிப்பாக அவர் பாடிய சிங் இன் தி ரெய்ன் 90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் என அனைவரையும் இன்றுவரை கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | கருத்தை வாபஸ் பெற முடியாது என்றார் இளையராஜா - கங்கை அமரன் விளக்கம்


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!