மீண்டும் அரசியலுக்கு வரும் வடிவேலு?- இந்த தடவை யார்கூட தெரியுமா?
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கும் மாமன்னன் திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த மார்ச்சில் தொடங்கியது.
பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் அடுத்ததாக உதயநிதி, பகத் பாசில், வடிவேலு, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார். மாமன்னன் எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவுள்ளார்.
மாரி செல்வராஜின் முந்தைய இரு படங்களுக்கும் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த நிலையில் இப்படத்தில் புதிய காம்போ உருவாகியுள்ளது. உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. முதற்கட்டப் படப்பிடிப்பு கடந்த மார்ச் 4ஆம் தேதி தொடங்கியது.
மேலும் படிக்க | விஜய், அஜித்தை முந்தும் தனுஷ்! - ஆச்சர்யத்தில் கோலிவுட்!
இந்நிலையில் இப்படத்திலிருந்து சில புதிய தகவல்கள் கசிந்துள்ளன. அந்த வகையில், இப்படத்தில் நடிகர் வடிவேலு மாமன்னன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளாராம். பரியேறும் பெருமாள் மற்றும் கர்ணன் ஆகிய இரு படங்களின் பெயர்களும் அப்படத்தின் கதாநாயகர்களின் பெயர்களில் அமைந்திருந்தன. அந்த வகையில் பார்த்தால் இதில் வடிவேலு கதாபாத்திரம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல நடிகர் வடிவேலு இதில் அரசியல்வாதியாக நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நகைச்சுவை தாங்கிய அரசியல்வாதி கதாபாத்திரங்களில் நடிகர் வடிவேலு ஏற்கெனவே நடித்துள்ளார். ஆனால் இப்படம் அவ்வாறு இல்லாமல் சீரியசான ரோலாக இருக்கும் எனவும் புதிய அவதாரத்தில் வடிவேலுவைக் காணலாம் எனவும் கூறப்படுகிறது. இத்தகவலால் இப்படத்துக்குத் தற்போது கூடுதல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் படிக்க | விஜய்- ஷாருக்கான் கூட்டணியில் புதிய படம்?! - வாய் பிளக்கும் திரையுலகம்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துகொள்ளவும், உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைதளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
ஃபேஸ்புக்கில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR