விஜய்- ஷாருக்கான் கூட்டணியில் புதிய படம்?! - வாய் பிளக்கும் திரையுலகம்!

பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டார்களுள் ஒருவரான ஷாருக்கானும் விஜய்யின் ரசிகர் என வெளிப்படையாக அறிவித்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Last Updated : Apr 6, 2022, 12:40 PM IST
  • ஷாருக்கானும் விஜய்யின் ரசிகர் என அறிவித்துள்ளது பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
  • நடிகர் விஜய் குறித்த ஷாருக்கானின் ட்விட்டர் பதிவு இணையத்தில் வைரல்
  • இயக்குநர் அட்லி இயக்கும் படமொன்றில் ஷாருக்கான் நடிக்கவுள்ளார்
விஜய்- ஷாருக்கான் கூட்டணியில் புதிய படம்?! - வாய் பிளக்கும் திரையுலகம்! title=

விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் அதன் தமிழ் வெர்சன் ட்ரெய்லர் கடந்த 2ஆம் தேதி வெளியானது. இணையத்தைத் துவம்சம் செய்த பீஸ்ட் ட்ரெய்லர் பார்வைகள் எண்ணிக்கையில் பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்துள்ளது. பீஸ்ட் ட்ரெய்லரைப் பார்த்த பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். இந்தப் பட்டியலில் தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானும் இணைந்துள்ளார்.

பீஸ்ட் படம் இந்தியில் RAW எனும் பெயரில் வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லரும் சமீபத்தில் வெளியானது. இந்நிலையில் இதுகுறித்துத் தெரிவித்துள்ள நடிகர் ஷாருக்கான், இயக்குநர் அட்லியுடன் இணைந்து பீஸ்ட் ட்ரெய்லரைப் பார்த்ததாகவும் அட்லியைப் போலவே தானும் விஜய்யின் மிகப் பெரிய ரசிகன் எனப் புகழாரம் சூட்டியுள்ளார். அத்துடன் படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.

                                                                           Beast Vijay

திரையுலகில் பல சினிமா நட்சத்திரங்கள் விஜய்க்கு ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் பாலிவுட்டின் மிகப்பெரிய ஸ்டார்களுள் ஒருவரான ஷாருக்கானும் விஜய்யின் ரசிகர் என வெளிப்படையாக அறிவித்துள்ளது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷாருக்கானின் அந்த ட்விட்டர் பதிவையும் விஜய் ரசிகர்கள்  இணையத்தில் ஷேர் செய்துவருகின்றனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு விருது நிகழ்ச்சியொன்றில் விஜய்யும் ஷாருக்கானும் இணைந்து துப்பாக்கி படத்தின் ‘கூகுள்’ பாடலுக்கு நடனமாடினர். அப்போதே அவ்விஷயம் பெரிதாக வைரல் ஆனது. தற்போது விஜய் குறித்த ஷாருக்கானின் பதிவும் வைரல் ஆகிவருகிறது. விஜய் பான்- இந்தியா ரிலீஸ் படங்களை நோக்கி தற்போது நகரத் தொடங்கியுள்ளார். அதேபோல இந்தியில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் படங்கள் வருவதொன்றும் புதிதும் அல்ல. எனவே,  விஜய்- ஷாருக்கான் கூட்டணியில் படம் உருவாகுமா எனும் கேள்வியும் எழுந்துள்ளது. ஒருவேளை அவ்வாறு அமையும் பட்சத்தில் அது மிகப்பெரிய தாக்கத்தை இந்திய சினிமாவில் ஏற்படுத்தும் எனவும் சொல்லப்படுகிறது.

                                                Beast Vijay

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ படத்துக்கு அரசு திடீர் தடை! - அதிர்ச்சியில் ரசிகர்கள்!

ஷாருக்கானின் இந்த ஒற்றை ட்வீட், பீஸ்ட் படம் மட்டுமல்லாது மற்றொரு விஷயத்தையும் பார்வையாளர்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது இயக்குநர் அட்லி ஷாருக்கானை வைத்து இயக்கப்போவதாக சொன்ன படம் கைவிடப்பட்டுவிட்டதாகவும், இருவருக்கும் இடையே பேச்சுவார்த்தைகூட இல்லை எனவும் கூறப்பட்டுவந்தது. ஆனால் ஷாருக்கானின் இந்த ட்வீட் இருவரும் இன்னும் ‘டச்’சில்தான் இருந்துவருகிறார்கள் எனத் தெளிவுபடுத்தியுள்ளது. இதனால் ஷாருக்கான் நடிப்பில் அட்லி இயக்கும் படம் தொடர்பான அடுத்தகட்ட அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | ‘பீஸ்ட்’டை இவங்களாம் பாக்கக் கூடாதாம்! - ஏன் தெரியுமா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News