மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான வலிமை திரைப்படத்துக்கு, தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதியது. ரசிகர்கள் விடியவிடிய காத்திருந்து அஜித்தின் வலிமை திரைப்படத்தை கண்டுகளித்தனர். பல தியேட்டர்கள் ஹவுஸ்புல் ஆனதால், வசூலிலும் வலிமை மிகப்பெரிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அஜித்துக்கு வலிமை சேர்த்திருக்கிறதா வலிமை? விமர்சனம்


சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான அண்ணாத்த திரைப்படம் முதல் நாளில் சுமார் 24 கோடி ரூபாய் வசூலித்தது தமிழ் சினிமாவின் முதல் நாள் அதிகபட்ச கலெக்ஷனாக உள்ளது. அந்த சாதனையை வலிமை திரைப்படம் முறியடித்திருக்க அதிக வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றனர். லேட்டஸ்டாக வெளியாகியிருக்கும் தகவலின்படி, வலிமை முதல் நாளில் 25 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. விடுமுறை நாளில் வெளியான அண்ணாத்த படத்தைக் காட்டிலும், வழக்கமான நாளில் வெளியான ’வலிமை’ இவ்வளவு தொகை வசூலித்திருப்பது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. 



கொரோனா வைரஸ் பரவலால் மூடிக் கிடந்த தியேட்டர்களுக்கு வலிமை திரைப்படம் புத்துயிர் கொடுத்திருப்பதாக கூறியிருக்கும் தியேட்டர் உரிமையாளர்கள், வரும் காலங்களில் ரிலீஸாக உள்ள மிகப்பெரிய நடிகர்களின் படங்களுக்கும் இதே வரவேற்பு கிடைக்கும் என நம்புவதாக கூறியுள்ளனர். தியேட்டர் ப்ரீ ரிலீஸ் விற்பனையை சேர்த்தால் சுமார் 70 கோடி ரூபாய் வலிமை வசூலித்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.



அந்தவகையில் பாகுபலி உள்ளிட்ட 3 திரைப்படங்கள் மட்டுமே முதல் நாளில் 70 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளன. அந்த லிஸ்டில் வலிமையும் இடம்பிடித்துள்ளது. வெளிநாடு வசூலைப் பொறுத்தவரை சிங்கப்பூர், மலேசியாவில் பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனில் வலிமை முதல் இடத்தை பிடித்துள்ளது.


மேலும் படிக்க | வலிமை படத்துக்கு பிரபலங்களின் ரியாக்ஷன் என்ன?


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR