ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்த அஜித்தின் 'வலிமை' படம் பிப்ரவரி 24ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்க இருக்கிறது.  ரசிகர்கள் தொடங்கி திரை பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் என அனைவரும் இப்படத்தை பார்க்க காத்திருக்கின்றனர்.  சில மாதங்களுக்கு முன்னர் இணையதளங்கள் முழுவதும் தீயாக திரையில் தோன்றியது வலிமை அப்டேட் குறித்த ஹேஷ்டேக்குகள் தான்.    


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | வலிமையுடன் போட்டிபோடும் மற்றொரு டாப் ஹீரோ படம்!


தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ள இந்த படத்தில்  ஹூமா குரேஷி, கார்த்திகேயா, சுமித்ரா, குர்பானி நீதிபதி, யோகிபாபு, குக் வித் கோமாளி புகழ் ஆகியோர் நடித்துள்ளனர்.  ரசிகர்கள் பலரும் அப்டேட் கேட்டு காத்திருந்த நிலையில் குறிப்பிட்ட நாளுக்கு பின்னர் வரிசையாக படத்திலிருந்து அப்டேட்டுகளாக வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காட செய்தது.  இப்படத்திலிருந்து வெளியான பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது.  இப்படத்திற்கு தணிக்கை குழு U/A சான்றிதழ் வழங்கி இருக்கிறது.   



சமீபத்தில் இப்படத்தை பார்த்த தயாரிப்பாளர் போனி கபூரின் நண்பர் கூட 'வலிமை' படம் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கிறது என்று பாராட்டினார்.  பொங்கல் பண்டிகையையொட்டி இப்படம் வெளியாக இருந்த நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக வெளியீட்டு தேதி தள்ளிப்போனது.  தற்போது திரையரங்குகளுக்கு 100% பார்வையாளர்களை அனுமதித்த நிலையில் இப்படம் பவரும் 24ம் தேதி வெளியாகிறது.  இந்நிலையில் 'வலிமை'  படத்திற்கு டிக்கெட் முன்பதிவு வரும் 20ம் தேதியில் இருந்து  தொடங்க இருப்பதாக சில திரையரங்குகள் அறிவித்துள்ளனர்.  அதனையடுத்து டிக்கெட் முன்பதிவு வலைதளங்களிலும் இன்னும் டிக்கெட் புக்கிங் தொடங்கப்படாத நிலையில் அந்த தளங்களிலும் 20ம் தேதி முதல் முன்பதிவு தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


 



வலிமை படத்தின் புரொமோஷன் வேலைகள் தற்போது வேகமாய் நடைபெற்று வருகிறது.  திரையரங்குகளில்  கட்டவுட்கள், தினமும் புதிய புரோ, பொது வெளிகளில் பேனர்கள் என திரும்பும் இடமெல்லாம் வலிமை சத்தம் கேட்க ஆரம்பித்து விட்டது.  வலிமை படத்தின் டிக்கெட் புக் செய்ய ரசிகர்கள் ஆவலுடன் காத்து கொண்டு உள்ளனர்.


மேலும் படிக்க | AK61: நடிகர் அஜித்தின் புதிய லுக்கை வெளியிட்டார் போனிக்கபூர்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR