வலிமையுடன் போட்டிபோடும் மற்றொரு டாப் ஹீரோ படம்!

அஜித்தின் வலிமை படத்துக்கு போட்டியாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாணின் 'பீம்லா நாயக்' படம் வெளியாகவுள்ளது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Feb 16, 2022, 01:27 PM IST
  • வலிமை பிப்ரவரி 24ம் தேதி வெளியாக உள்ளது.
  • மலையாளத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக் பீம்லா நாயக்.
  • எஸ்.தமன் பவன் கல்யாணுடன் இணைந்து இரண்டாவது முறையாக இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.
வலிமையுடன் போட்டிபோடும் மற்றொரு டாப் ஹீரோ படம்! title=

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'வலிமை' படத்தை பார்க்க பலரும் காத்து கொண்டிருக்கின்றனர்.  பல்வேறு தடங்கலுக்கு பிறகு இறுதியாக இப்படம் பிப்ரவரி 24ம் தேதி வெளியாகும்  என்று படக்குழு அறிவித்ததிலிருந்து ரசிகர்கள் பலரும் நாட்களை எண்ணிக்கொண்டு இருக்கின்றனர்.  தற்போது நீண்ட நாள் ரசிகர்களை காக்க வைத்திருந்த 'வலிமை' படம் வெளியாகப்போகும் நிலையில் இப்படத்திற்கு போட்டியாக தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பவன் கல்யாணின் 'பீம்லா நாயக்' படம் வெளியாகவுள்ளது.

nayak

மேலும் படிக்க | காதலர் தின பரிசாய் வெளிவந்துள்ளது அரபிக் குத்து பாடல்!

சாகர் கே சந்திரா இயக்கத்தில், பவன் கல்யாணை வைத்து சித்தாரா என்டெர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரித்திருக்கும் படம் 'பீம்லா நாயக்'.  இந்த படத்தில் ராணா டகுபதி, நித்யா மேனன், சம்யுக்தா மேனன், சமுத்திரக்கனி, பிரம்மானந்தம், முரளி சர்மா, ரகு பாபு போன்ற பலர் நடித்துள்ளனர்.  இது கடந்த 2020-ம் ஆண்டு மலையாளத்தில் சச்சி இயக்கத்தில் வெளியான ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்காகும்.

ayyapanumkosium

கடந்த 2021-ல் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு, ஹைதராபாத்தில் காட்சிகள் படமாக்கப்பட்டது.  இப்படத்தில் முதலில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக நடிக்க சாய் பல்லவியையும் மற்றும் ராணாவிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷையும் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.  ஆனால் சில காரணங்களால் இவர்கள் இப்படத்திலிருந்து விலகிவிட, அதன் பின்னர் நித்ய மேனன் மற்றும்  சம்யுகதா மேனனை படக்குழு அணுகி ஒப்பந்தம் செய்தது.  கடந்த ஆண்டு கொரோனா தொற்று பரவலால் இப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் படத்தின் பணிகள் தொடங்கப்பட்டு நிறைவடைந்தது.

எஸ்.தமன் பவன் கல்யாணுடன் இணைந்து இரண்டாவது முறையாக இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.  இப்படத்திலிருந்து வெளியான நான்கு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படம் வரும் பிப்ரவரி-25ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது, மேலும் இது அஜித்தின் 'வலிமை' படத்திற்கு போட்டியாக இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க | AK61: நடிகர் அஜித்தின் புதிய லுக்கை வெளியிட்டார் போனிக்கபூர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News