நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பீஸ்ட் படம் நாளை வெளியாக இருக்கிறது. படம் வெளியாவதை திருவிழா போல் கொண்டாட விஜய் ரசிகர்கள் தயார் நிலையில் இருக்கின்றனர். மழை, வெயில் என எதையும் பார்க்காமல் கட் அவுட் வைப்பது, போஸ்டர் அடிப்பது என மும்முரமாக இறங்கியுள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்துக்கான டிக்கெட் விற்பனை தொடங்கி ஏறத்தாழ அனைத்து திரையரங்குகளிலும் விற்று தீர்ந்துவிட்டன. இதற்கிடையே, பீஸ்ட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று யூட்யூபிலும் சாதனை படைத்தது.ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள், விஜய் ரிச்சாகவும், நெல்சனின் மேக்கிங் பிரஷ்ஷாகவும் இருப்பதாக சிலாகித்தனர்.



இந்நிலையில் நாளை படம் வெளியாக இருப்பதையொட்டி தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் தொடர்ந்து விடுப்பு விண்ணப்பித்துவந்தனர்.


இதனையடுத்து திருப்பூரில் செயல்படும் நிட்பிரைன் என்ற பின்னலாடை நிறுவனம், சென்னை வேளச்சேரியில் உள்ள ஆரா இன்ஃபோமேட்டிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நாளை விடுமுறை அறிவித்துள்ளன. 


மேலும் படிக்க | நான் சொன்னத தப்பா புரிஞ்சுகிட்டாங்க - விஜய் கோபம்!


ஊழியர்களுக்கு சில நிறுவனங்களே பீஸ்ட் படத்துக்கான டிக்கெட்களையும் இலவசமாக வழங்கியிருக்கிறது. இதனால் அனைவரும் பீஸ்ட் மோடுக்கு சென்றிருக்கின்றனர்.


மேலும் படிக்க | ‘பீஸ்ட்’ திரை விமர்சனம்: தீயாகப் பரவும் வைரல் போஸ்ட்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR