நடிகர் விஜய் இப்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்துவருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கடந்த ஜூலை  மாதம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. படத்தில் விஜய் ஆப் டெவலப்பராக நடிப்பதாக கூறப்படுகிறது. சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்புகள்  நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்துவருகிறது. இதற்கிடையே வாரிசு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிக்கொண்டிருந்தன. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குநர் வம்சி, ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் மொபைல் ஃபோனை பயன்படுத்தக்கூடாது என கண்டிஷன் போட்டார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

படத்துக்கு தமன் இசையமைக்கிறார். இந்தச் சூழலில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது வெளியாகுமென்று ரசிகர்கள் காத்திருந்தனர். அவர்களுக்கு உற்சாகம் கொடுக்கும் விதமாக தற்போது ஒரு தகவல் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. அதாவது இசையமைப்பாளர் தமன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் புகைப்படத்தை பகிர்ந்து தீபாவளி என்று குறிப்பிட்டிருக்கிறார்.



இதனைக் கண்ட நெட்டிசன்கள் வாரிசு படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் தீபாவளிக்கு வெளியாவதைத்தான் தமன் இவ்வாறு கூறியிருக்கிறார் என பதிவிட்டுவருகின்றனர். மேலும் தமனின் இன்ஸ்டா போஸ்ட்டை விஜய் ரசிகர்களும் அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.


முன்னதாக, விஜய்யின் வாரிசு படம் ரிலீஸாவதற்கு முன்னரே 180 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியானது. படத்திற்கான தொலைக்காட்சி உரிமம், ஓடிடி உரிமம், பாடல்களுக்கான உரிமம், வெளிநாட்டு ரிலீஸ் உரிமம் என 180 கோடி ரூபாய்க்கு வியாபரம் நடந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 


மேலும் படிக்க | கீர்த்தி சுரேஷ் பிறந்த நாளில் வெளியான மாஸ் போஸ்டர்


ஓடிடி உரிமத்தை அமேசான் பிரைம் நிறுவனம் 60 கோடி ரூபாய்க்கு பெற்றுள்ளதாகவும், சாட்டிலைட் உரிமம் 50 கோடி ரூபாய்க்கும், டிஜிட்டல் ரைட்ஸ் 60 கோடி ரூபாய்க்கும், பாடல்கள் 10 கோடி ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் பேசப்படுகிறது. வாரிசு படம் பொங்கலுக்கு வெளியாகவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க | ஹன்சிகாவுக்கு டும் டும் டும்... பிரம்மாண்டாமாக தயாராகும் அரச மாளிகை - எப்போது தெரியுமா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ