ஹன்சிகாவுக்கு டும் டும் டும்... பிரம்மாண்டாமாக தயாராகும் அரச மாளிகை - எப்போது தெரியுமா?

நடிகை ஹன்சிகாவுக்கு ஜெய்ப்பூர் கோட்டையில் விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

Written by - Sudharsan G | Last Updated : Oct 17, 2022, 02:03 PM IST
  • ஹன்சிகா 50ஆவது திரைப்படம் சமீபத்தில் வெளியானது.
  • ஹன்சிகா 2011ஆம் ஆண்டில் தமிழில் அறிமுகமானார்.
  • ஹன்சிகா - சிம்பு இருவரும் காதலித்து பிரிந்தது நினைவுக்கூரத்தக்கது.
ஹன்சிகாவுக்கு டும் டும் டும்... பிரம்மாண்டாமாக தயாராகும் அரச மாளிகை - எப்போது தெரியுமா? title=

நடிகை ஹன்சிகா மௌத்வானி, தொலைக்காட்சி தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இந்தி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் ஆரம்பத்தில் நடித்து வந்தார். 2011ஆம் ஆண்டில், தனுஷ் நடிப்பில் வெளியான 'மாப்பிள்ளை' திரைப்படம் மூலம் அறிமுகமான அவர், அந்த ஆண்டே ஜெயம் ரவியுடன் 'எங்கேயும் எப்போதும்', விஜயுடன் 'வேலாயுதம்' ஆகிய திரைப்படங்களில் நடித்தார். 

தொடர்ந்து, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சேட்டை', 'தீயா வேலை செய்யனும் குமாரு' போன்ற காமெடி படங்களிலும் கலக்கினார். சூர்யாவின் பிளாக்பஸ்டர்களில் ஒன்றான 'சிங்கம் 2' திரைப்படத்தில் பள்ளி மாணவியாக நடித்திருந்தார். 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

மேலும் படிக்க | சிம்புவுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்! அதுவும் இந்த இயக்குனரின் படத்திலா?

படங்களில் நடித்துக்கொண்டிருந்த போதே, நடிகர் சிம்புவுக்கும் இவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது. அவருடன் 'வாலு' படத்தில் நடிக்கும் போது இவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்பட்ட நிலையில், ஓராண்டிலேயே இருவரும் பிரிந்துவிட்டனர்.

ஹன்சிகாவின் 50ஆவது திரைப்படமான 'மகா' சமீபத்தில் வெளியானது. இடையில் அவருக்கு பட வாய்ப்பு குறைந்த நிலையில், தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் படுபிசியாக உள்ளார். இந்நிலையில், விரைவில் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அந்த திருமணம் அரச மாளிகையில் நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Hansika Motwani (@ihansika)

அதாவது, வரும் டிசம்பர் மாதம், ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் கோட்டையில் அவரது திருமணம் நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் தற்போது தொடங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. 450 வருடங்கள் பழமையான அந்த கோட்டையில், மிகப்பிரம்மாண்டமாக அவரது திருமணம் நடைபெற உள்ளது. 

ஜெய்ப்பூரின் முண்டோட கோட்டை மற்றும் மாளிகையில் நடைபெறும் அவரது திருமணத்தின் தேதி, மணமகன் குறித்த தகவல்கள் ஏதுமில்லை. இருப்பினும் அவர் தொழிலதிபர் என்றும், திரைப்படத் துறையை சேர்ந்தவர் இல்லை எனவும் தகவல்கள் கூறுகின்றன. தலைநகர் டெல்லியில் இருந்து 5 மணிநேர பயணம் செய்தால் ஜெய்ப்பூரின் முண்டோட கோட்டைக்கு சென்றுவிடலாம் என தெரிவிக்கப்படுகிறது.

 

மேலும் படிக்க | பொன்னியின் செல்வன் 'வானதி'யின் வாயை பிளக்கவைக்கும் ஸ்டில்ஸ்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News