தீ தளபதி... வாரிசு இரண்டாவது சிங்கிள் வெளியானது
விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் வாரிசு படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியிருக்கிறது. பாடலை சிம்பு பாடியிருக்கிறார்.
நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர்.தில்ராஜு தயாரித்திருக்கிறார், தமன் இசையமைத்திருக்கிறார். படத்திற்கு ஆந்திர திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போட முயல படம் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு வெளியாகுமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்திருந்தது. ஆனால் தடைகளை தாண்டி படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியிருக்கிறது. துணிவு படம் பொங்கலுக்கு வெளியாவதால் வாரிசு Vs துணிவு என்ற போட்டி உருவாகியிருக்கிறது.
இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பாடலை விஜய்யும், மானசியும் பாட பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார். இதுவரை 75 மில்லியனுக்கும் அதிகமானோர் பாடலை யூட்யூப்பில் பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ பாடல் இன்று வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாடலானது தற்போது வெளியாகியிருக்கிறது. 30 வருடங்களை நிறைவு செய்திருக்கும் விஜய்க்கு இந்தப் பாடல் சமர்ப்பிக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் பாடலை சிம்பு பாடியிருக்கிறார். முதல்முறையாக விஜய்க்கு எஸ்டிஆர் குரல் கொடுத்திருப்பதால் இரண்டு பேரின் ரசிகர்களும் பாடலை கொண்டாடிவருகின்றனர்.
முன்னதாக, தமன் குறித்து பேசியிருந்த வம்சி பைடிபள்ளி, முதல்முறையாக விஜய் படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார். அவர் எவ்வளவு ஈடுபாட்டோடு உழைத்தார் என்பதை நீங்கள் படம் பார்க்கும்போதும், பாடல்களை கேட்கும்போதும் உணர்ந்துகொள்ளலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | ஹிந்தியில் வெளியாகும் வாரிசு! தலைப்பு என்ன தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ