மணிரத்னம் இயக்கத்தில் இந்திய திரையுலகின் முக்கிய நடிகர்கள் நடிக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன். மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகும் இத்திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருக்கிறது. சமீபத்தில் இத்திரைப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் யார் யார் நடிக்கின்றனர் மற்றும் அவர்களின் பெயர்கள் வெளியானது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மணிரத்னம் (Mani Ratnam) இயக்கத்தில் எடுக்கப்பட்டு வரும் பொன்னியின் செல்வன் (Ponniyin Selvan) படத்தில் ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஜெயராம், சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், த்ரிஷா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களை ஏந்தி நடிக்கின்றனர். இதுகுறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்து பொன்னியின் செல்வன் நாவலின் ரசிகர்கள் கருத்துக்களை எழுத தொடங்கினர். சரியான கதாபத்திரங்கள் தேர்வ செய்யப்படவில்லை, வேறொரு ஆட்களை பயன்படுத்தி இருக்கலாம் போன்ற பல விமர்சனங்கள் வந்த வண்ணம் இருந்தன. 


ALSO READ | பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு: Viral ஆகும் Aishwarya Rai புகைப்படம்


இந்நிலையில் ‘பொன்னியின் செல்வதை வெங்கட் பிரபு எடுத்திருந்தால் பிரேம்ஜி கேரக்டரை நெனச்சி பாரு, என் செலக்சனே பரவால்லனு தோணும்’ மணிரத்னம் சொல்வது போன்று ரசிகர் ஒருவர் கிண்டலாக பதிவிட்டுருந்தார். வழக்கமாக வெங்கட் பிரபுவின் அனைத்து படங்களிலும் அவரது சதோதரர் பிரேம்ஜி இருப்பார்.



இதை வைத்து கிண்டலாக பதிவிட்டிருந்த ரசிகருக்கு சிரித்துக்கொண்டே ‘அட பாவிங்களா’ என்று பதிலளித்துள்ளார் வெங்கட் பிரபு. இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR