மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற "மேயாத மான்" படத்தை அடுத்து இயக்குநர் ரத்னகுமார் இயக்கி வரும் இரண்டாவது படம் தான் "ஆடை" இந்த படத்தில் அமலா பால் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தை வி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. படத்திற்கு இசை பிரதீப் குமார் மற்றும் ஒளிப்பதிவு விஜய் கார்த்திக் கண்ணன் ஆவார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தற்போது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இதில் அமலா பாலின் தோற்றத்தை பார்க்கும் போது, அவர் இதுவரை நடிக்காத கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது தெளிவாகிறது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.