களைகட்டிய விக்ரம் விருந்து... சிலாகித்த பிரபல தியேட்டர் ஓனர்
விக்ரம் படத்தின் வெற்றியை அடுத்து வைக்கப்பட்ட விருந்து தொடர்பாக பிரபல திரையரங்க உரிமையாளர் சிலாகித்து ட்வீட் செய்துள்ளார்.
கமல் நடித்து கமலின் தீவிர ரசிகரான லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான படம் விக்ரம். ஜூன் 3ஆம் தேதி வெளியான இப்படத்துக்கு ரசிகர்கள் தங்களது அமோக வரவேற்பை கொடுத்திருக்கின்றனர்.
கேஜிஎஃப் 2, புஷ்பா, ஆர்ஆர்ஆர் ஆகிய வெளி மாநில படங்கள் மட்டும் தமிழ்நாட்டில் ஓடுகின்றன என்ற பெயரை மாற்றி இண்டஸ்ட்ரியல் ஹிட்டாகி இருக்கிறது விக்ரம்.
இதனால் லோகேஷ், அவரது உதவி இயக்குநர்கள், சூர்யா உள்ளிட்டோருக்கு கமல் ஹாசன் பரிசளித்து கௌரவித்தார். படத்தை பார்த்த சிரஞ்சீவியும் கமலையும், லோகேஷையும் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்து சிறப்பித்தார்
அதுமட்டுமின்றி ஏகப்பட்ட சக்சஸ் மீட்டுகளும் படக்குழுவினர் சார்பில் நடத்தப்பட்டுவருகின்றன. அந்தவகையில் நேற்று விக்ரம் படத்தின் வெற்றி விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் கமல் ஹாசன், லோகேஷ் கனகராஜ், அனிருத், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
விழா முடிந்த பிறகு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கு கமல் ஏற்பாட்டின்பேரில் விருந்து வைக்கப்பட்டது. இந்த விருந்தில் சைவம், அசைவம் என இருவகைகளிலும் பரிமாறப்பட்டது. இதுதொடர்பான புகைப்படங்களையும், வீடியோக்களையும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகம் ஷேர் செய்துவருகின்றனர்.
இந்நிலையில் குரோம்பேட்டை வெற்றி தியேட்டர் உரிமையாளர் நேற்று நடந்த விருந்து குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “லோகி ஸ்டைலில் பலமான விருந்து வைக்கப்பட்டிருக்கிறது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் மற்றும் ரெட் ஜெயின் நிறுவனங்களுக்கு நன்றி” என பதிவிட்டிருக்கிறார். இந்த ட்வீட்டோடு அவர் பகிர்ந்திருந்த விருந்துக்கான மெனு கார்டு புகைப்படமும் வைரலாகியுள்ளது.
முன்னதாக விக்ரம் படத்தில் கமலும் அவரது கேங்கை சேர்ந்தவர்களும் சிறையிலிருந்து சுரங்கப்பாதையில் வந்து வெற்றி தியேட்டர் வழியாக தப்பிப்பது போன்று காட்சியமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR