வாடிவாசல் கதை இதுதான்... வெற்றிமாறன் வெளியிட்ட தகவல்
வாடிவாசல் கதை குறித்து வெற்றிமாறன் வெளியிட்டிருக்கும் தகவல் கவனம் ஈர்த்துள்ளது.
இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். வெற்றியின் படங்கள் அனைத்தும் வாழ்வியலையும், அரசியலையும் தீர்க்கமாக பேசக்கூடியவை. அதனால்தான் இயக்குநர் இமயம் பாரதிராஜா உள்ளிட்ட மூத்த இயக்குநர்கள் பலரும் வெற்றிமாறனை பல மேடைகளில் புகழ்ந்துள்ளனர். முக்கியமாக கற்பனையாக மட்டும் கதையை யோசிக்கலாம் என்ற நிலையிலிருந்து நாவல்களை அடிப்படையாக வைத்தும் சினிமா எடுக்கலாம் என்ற விதையை ஆழமாக விதைத்தவர் வெற்றிமாறன்.
அவர் இயக்கிய அசுரன் அந்த வகையை சேர்ந்தது. பூமணி எழுதிய வெக்கை நாவலை அடிப்படையாக வைத்து உருவாகியிருந்த அசுரன் பஞ்சமி நிலம் குறித்த விவாதத்தை எழுப்பியது. அவர் தற்போது ஜெயமோகனின் கதையை அடிப்படையாக வைத்து விடுதலை என்ற படத்தை இயக்கிவருகிறார். இதில் சூரியும், விஜய் சேதுபதியும் நடித்துவருகின்றனர். படம் இரண்டு பாகங்களாக வெளியாகவிருக்கிறது.
இதனையடுத்து அவர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படமும் எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய ‘வாடிவாசல்’ புத்தகத்தை அடிப்படையாக வைத்து உருவாகிறது. இயக்கம் மட்டுமின்றி படங்களையும் தயாரித்துவரும் வெற்றிமாறன் தற்போது பேட்டைக்காளி என்ற வெப்சீரிஸை தயாரித்திருகிறார்.
ராஜ்குமார் இயக்கியிருக்கும் பேட்டைக்காளி ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகியுள்ளது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த சீரிஸில் கிஷோர், கலையரசன், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஆஹா ஓடிடி தளத்தில் ஒளிபரப்பாகும் இந்த வெப் சீரிஸில் இதுவரை இரண்டு எபிசோடுகள் ஒளிபரப்பாகியுள்ளன. இந்த வெப் சீரிஸும் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.
அதேசமயம் வாடிவாசல் படமும் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாவது குறிப்பிடத்தக்கது. எனவே பேட்டைக்காளிதான் வாடிவாசலின் முன்னோட்டமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்தது.
இந்நிலையில் வெற்றிமாறன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “பேட்டைக்காளி இப்போதைய காலகட்டத்தில் உள்ள கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வாடிவாசல் படம் தமிழ்நாட்டில் 60களில் உள்ள காலகட்டத்தில் உள்ளவாறு எடுக்கப்பட உள்ளது. இதனால் இந்த இரண்டு படத்தின் கதைக்களமும் வேறு” என குறிப்பிட்டுள்ளார். இதனால் இரண்டு படங்களும் வேறு வேறு என உறுதியாகியுள்ளது.
முன்னதாக இந்த படத்திற்காக சூர்யா காளைகளுடன் பயிற்சி எடுக்கும் வீடியோ காட்சி வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தது. இதற்கிடையே சூர்யா தற்போது சிவாவின் படத்திலும், பாலாவின் படத்திலும் நடித்துவருகிறார். இந்த இரண்டு படங்களையும் முடித்துவிட்டு வாடிவாசல் படத்துக்கு சூர்யா வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | பெண் சுகம் கேக்குதோ?... நெறியாளருக்கு செம பதிலடி கொடுத்த பப்லு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ